Thursday, December 29, 2011

கனவில் எழுதிய கவிதை





கனவில் எழுதிய கவிதை;
கண் விழித்ததும் மறந்ததை போல;
கண்டதும் வந்த காதல் - நீ
காணாமல் போனதும் கரையாதோ......

Monday, September 19, 2011

உன்னை தேடி வந்தேன்











ஏதோ ஒரு மாலை மழை தூறும் வேளை உன்னை  மீண்டும் சந்திப்பேன்;
என் காதலை உன் மொழியில் சொல்லி உன்னை இருகையால்வாரி அணைப்பேன்;
என்ற பல அற்ப சொற்ப கற்பனைகளோடுதான் அன்பே உன்னை தேடி வந்தேன்;
அந்நாட்களின் ஞாபகங்கள் உயிரில் வளர்த்த மாய மலைகளை சுமந்து வந்தேன்;

செல்லமாய் நீ முறைத்ததும் சிறுபிள்ளைபோல் நீ அழுததும்;
வெல்லமாய் நீ சிரித்ததும் வானமாய் என் வாழ்வில் நீ படர்ந்ததும்;
உன்னோடு இரவுகளில் உறக்கம் துறந்ததும் எழுதி வைத்த கவிதைகளை உன்னிடம் கொடுக்க மறந்ததும்;
உன்னை தேடி ஓடி வரச்சொல்லி என்னை தூண்ட உயிரும் மண்டியிட்டு வேண்ட நான் வந்தேன்;

நதி போகும் வழி யாவும் மனிதனின்  நாகரீகம் தோன்றியதாய்;
ரதி உன்னை கண்ட இடம் எங்கும் என் நினைவுகள் தொன்றியது;
விதி நம்மை பிரித்தது அன்பே தேய்பிறை போல் இன்பம் தேய்ந்தது;
கதி நீதான் என்று மூன்று வருடம் கழித்துன்னை தேடி நான் வந்தேன்;

உன் வீடு வந்தவுடன் உன் கல்லூரி நண்பனென மட்டுமே அறிமுகமாயிருந்த என்னை உன் தாய் உபசரிக்க;
அவர் காட்டிய உன் திருமண புகைப்படங்கள்  என் ஊன் உடல் உயிர் ஆன்மா ஜீவனென முழுவதுமாய் எரிக்க;
இதற்காகவா கண்டங்கள் தாண்டி அண்டமெல்லாம் சுற்றி என் காதலுக்கு பிண்டம் வைக்கும் இக்கட்சியை பார்க்க; 
ஆண்டுகள் கழிந்து ஓடி வந்தேன் இனி என்ன செய்ய போகிறேன் எங்கு செல்ல போகிறேன் என்று ஆயிரம் கேள்விகள் என்னை நானே கேட்க;

புண்பட்ட புன்னகையோடு அங்கிருந்து விடை பெற்றேன் அன்பே வாழ்வியலின் மெய் நடையை உன்னிடம் நான் கற்றேன்;
அன்று உன் காதலை நீ சொன்னதும் உயிர் பெற்றேன் இன்று ஏனடா உன்னை காதலித்தேன் என்று உயிர் போகும் துயருற்றேன்;
சொடுக்கு போடும் நாழிகையில் என்னை நீ பிரிந்தாய் இனி உன்நினைவுகள் தொடுக்கும் கணைகளை தனியாய் எப்படி எதிர் கொள்வேன்;
அன்பே  உயிர் போகும் வரை மனகுகையில் ஓவியமாய் உன்னை வைத்திருப்பேன், ஆயிரம் மரணம் தாண்டியும் உனக்காக நான் பிறப்பேன்.,

Sunday, August 7, 2011

Happy Friendship Day




When Sorrows glories wrinkles and baffles covered our old age,
When its time to step down and walk away from life stage,

When memories would play my days which were real hardship,
To recall the way you stood with me proving your friendship,

How would i forget every thing we shared from failure to success,
And the way our life flip-flopped and lost in the hex of the life phases,

I will bequeath to send this message before body and soul breaches,
Oh my friend, I Wanna hug you once to say My Friendship Day Wishes....,

Saturday, August 6, 2011

Will my whole life would end up this way???




Every night and Every Day,
I look at myself and say,

Just tell her if you love her,
No matter whatever she says,

But my holy spirit is afraid to fay,
Always imagines that she may nay,

Will my whole life would end up this way???
No never she'll come and things forever would hay.....

Thursday, August 4, 2011

ನೆನಪುಗಳು







ಹಸಿರಾದ ಕನಸುಗಳು ಅರಳುವ ಸಮಯ;
ಹಾಳಾದ ಹ್ರುಧಯದಲ್ಲಿ ಪ್ರೀತಿಯ ಪ್ರಳಯ;
ಸಾವಿರಾರು ಕಹಿ ತಾಪತ್ರಯಗಲಲ್ಲೂ ;
 ಸಿಹಿ ಗಾಳಿಯಾಗಿ ನಿನ್ನ ನೆನಪುಗಳು.,

Friday, July 22, 2011

கண்ணா









எழில்மிகு பூம்பொழில் கார்முகில் சூழ் சோலையிலே;
கார் குழலாள் பூங்கழலாள் ராதை அங்கே காத்திருக்க;
புலரும் பனிப்பொழியும் புனல் குளிரும் வேளையிலே;
 செவ்விதழோன் புல்லாங்குழலோன் கண்ணன் நீ பாட்டிசைக்க;
கறவைகள் கண் மூடி செவி சிமுட்டி மயங்கி நிற்க;
பறவைகள் கூடி அமர்ந்து புவி மறந்து செவி மடுக்க;
அங்கு கண்ணா நான் கன்றாக நின் விழி பட ஆழிவண்ணா முக்தி தருவாயோ;
இல்லை நீ ஏந்தும் குழலாக வண்ணமயில் பீலியாக நான் மாறும் உக்தி தனை சொல்வாயோ......

Monday, June 20, 2011

மரம் Trees

நிழல் தந்து வாரி அணைத்தேன்;
காய் கனி தந்து உன் பசி தீர்த்தேன்;
நீ உயிர் வாழ காற்றளித்து நான் வளர்ந்தேன்;
இன்று வேரோடு என்னை சாய்த்து கொண்டிருக்கிறாய்;
மறதி நோய் பிடித்த மனிதனே - என் மகனே -
மறக்காமல் என்னை வெட்டிய  பின் சில கட்டைகளை சேமித்து வை;
நாளை நீ இறந்தால் புதைக்கவோ இல்லை எரிக்கவோ நான் தேவை படலாம்..
- மரம்




i did spread shadow on your sunny days;
i bore fruits while you were with hungry face;
i produced oxygen for you to breath;
today you are uprooting me from surface beneath;
amnesiac human my dear son;
don't forget to save these logs after you cut me to pieces;
may help you at your funeral to burn you to ashes;
or to build your grave after all nothing is permanent we all are losers...
--- Trees ---

Friday, April 15, 2011

I am sorry







I did a big mistake last night;
You walked away out of my sight;
I was out of control i was drugged;
I thought it was you with me on our bed;

I can smell the days of loneliness;
I am sorry i forgot your love and holiness;
One day i would lay down in coffin my love;
If you fail to apologize me my dove;


Let the last night bitter past be fade.,
Till then i would hold on with memories you laid;
I am sorry for the mistake i did;
I hate myself for crying now like a kid.

Wednesday, March 23, 2011

ஷாந்தி அடையாத ஷாந்தி.

MyFreeCopyright.com Registered & Protected







பெசன்ட் நகரில் 29 டிசம்பர் 2010, புதன் கிழமை காலை பத்து மணி, ஸ்ட்ரெச்சரில் ஒரு ஆண் பிணத்தை எடுத்து அம்புலன்சில் ஏற்ற, சுற்றி மலத்தில் ஈக்கள் போல மொய்த்துக் கொண்ட நர மனிதர்கள் கூட்டத்தை அப்புற படுத்திக் கொண்டிருந்தனர் போலீசார், வீட்டுக்குள் யாரும் இல்லை சிலந்தி பின்னிய வலைகளும், உடைந்து நொறுங்கிய சிலைகளும், மூன்று நாளில் மூளை முடுக்குகளில் பரவிவிட்ட ஒரு பிணத்தின் வாடையும்தான் அந்த பாழடைந்த வீட்டை படை எடுத்திருந்தது, இந்த வீட்டிலிருந்தது மோகன். பி.பி.ஓ கம்பனியில் வேலை பார்த்து வந்த ஒரு  படித்த பொறியியல் பட்டதாரிக்கு ஏன் இந்த நிலைமை; அவன் எதற்காக தூக்கி மாட்டி இறக்க வேண்டும்.,
இவன் வாழ்கையை சில வருடங்களுக்கு முன்பு சென்று பார்ப்போம்.,
மும்பையில் படித்து சென்னைக்கு வேலை பார்க்க வந்த மோகனின் தாய் தந்தையர் மும்பை தமிழர்கள்., ஆனால் பாவம் அவன் பள்ளிக்கூடம் முடிக்கும் முன்னமே அவர்கள் இறந்து போயினர்., அவன் மாமாதான் அவனை வளர்த்தார்., அவன் அப்பாவின் சொத்தை முழுவதுமாக சுருட்டி விட்டு., இவன் வாயை மூட., சென்னையில் பெசன்ட் நகரில்  ஒரு அபார்ட்மென்ட் வீடு விலைக்கு வாங்கி கொடுத்தார்.,
மோகனுக்கு சென்னைக்கு வந்த போது அவன் வேலை பார்க்கும் கால் சென்டரில், கூட வேலைக்கு சேர்ந்தாள் ஒரு பெங்களூர் பெண் ஷாந்தி.,


இருவருமாக காதலில் விழுந்து காதல் முத்திய நிலையில் லிவ்-இன் ரெலேஷன் ஷிப் வைத்துக் கொண்டனர்., அதாவது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆறு மாதமோ ஒரு வருடமோ ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து கிட்ட தட்ட தாம்பத்ய வாழ்கையை ஒத்திகை பார்க்கும் புது வித மேற்கத்திய கலாசாரம்., அவளுக்கோ கேட்பதற்கு என்று யாருமில்லை., அவளின் 6 வது வயதிலேயே., அவளின் தந்தை இறந்து போக, அவளுக்கு 8 ஆம் வயது ஆகும் போது அவளின் அம்மா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள., அவளை வீட்டைவிட்டு வெளியேற்றினான் அவளின் இரண்டாம் தகப்பன்., கேட்பதற்கு நாதியின்று ஒரு அனாதையார் ஆஸ்ரமத்தில் வளரந்தவள் எப்படியோ இன்று அதே அனாதை ஆஸ்ரமத்திற்கு கொடை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டால்., மோகன் சாத்திரங்களில் நம்பிக்கை இல்லாதவன் என்பதால்., வீட்டிற்கு க்ரஹப்ரவேசம் பால் காய்ச்சுதல் என்று எந்த ஒரு விழாவும் இன்றி அமைதியாக இருவரும் புது மனையில் புகுந்தனர்.,
ஆரம்பத்தில் சில நாட்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை., சாந்தமாக போய்க்கொண்டிருந்தது புது மனை வாழ்க்கை., அந்த ஒரு சம்பவம் நடக்கும் வரையில்..,
மாடியில் ஒரு நாள் இரவு பதினோரு மணி அளவு., கொடியில் காற்றோடு காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுக்க சென்றால்., திடீரென கரண்ட் கட் ஆனதில் லிப்டில் வர இயலாமல் அங்கிருந்து 8 ஆம் மாடி வரை இறங்கி வர முனைந்தால்., இறங்கி வரும் போது அவள் பின்னிருது யாரோ தள்ளி விட்டதை போல் இருக்க கால் தடுக்கி மாடி படிகளில் இருந்து உருண்டு விழுந்தாள் ஷாந்தி.,  அவள் கைகளை கம்பி போன்ற மயிர்கள இழுத்து செல்வதைப்போல் உணர்ந்தால்., அவளை கத்த விடாமல் ஒரு கழிமண்ணில் குழைத்து பிணத்தின் மேல் ஊரும் புழுக்கள் போல மறு கை அவள் வாயை மூடியதை கண்டால்., தர தர தரவென அவளை படிகளில் இருந்து இழுத்து அவள் வாசப்படியிடம் வருவதற்குள் கரண்ட் வந்துவிட., திடீரென உருவங்கள் காணாமல் போயின., ஏதோ உருண்டு விழும் சத்தம் கேட்டு ஓடி வந்த அபார்ட்மென்ட்காரர் அவள் முதுகு பக்கம் பேண்ட்டும் டி-ஷிர்டும் கிழிந்து ரத்த வெள்ளத்தில் அவள் மிதந்திருப்பதை கண்டு கத்தி கூச்சல் போட்டு அனைவரையும் வரவழைத்தார்., மோகன் ஓடி வந்து ஒரு போர்வையால் அவளை மூடி சுருட்டி அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தான்., மயங்கி கிடந்த அவளுக்கு சுய நினைவு திரும்ப இரண்டு நாட்கள் ஆனது., சுய நினைவு திரும்பிய உடன் மோகன் அருகில் அமர்ந்திருக்க அவனை கட்டிபிடித்து கதறினால்., அவளை சமாதான படுத்திவிட்டு நடந்தவைகலை கேட்டான் மோகன்.,  அவளும் முழுதாக விவரிக்க., அவன் கோவத்தில் யாரோ திருடர்கள் வந்திருப்பார்கள் நீயாக எதையோ கற்பனை செய்துக்கொள்ளாதே., ஆவியும் இல்லை ஆண்டவனும் இல்லை., பேய் பிசாசு என்று பைத்தியக்கரத்தனமாக பேசாமல் படுத்து ஓய்வெடுத்துக்கொள்., சில நாட்களுக்கு நீ கம்பனிக்கு வர வேண்டாம்., நான் டீம் லீடரிடம் பேசிக்கொள்கிறேன்., உன்னை பார்த்துக்கொள்ள ஒரு நர்சை ஏற்பாடு செய்துள்ளேன்., வீணாக எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் முதலில் உறங்கு என்று பேசி அவளுக்கு ஒரு அசட்டு தைரியம் கொடுத்து உறங்க செய்தான்.,




 சுமார் மூன்று மணி இருக்கும்., கீச் கீச் என காது ஜவ்வுகளை கிழிக்கும் ஒரு சத்தம்., எழுந்து பார்த்தால் ஒரே வெட்டவெளி, கார் மேகங்கள் சூழ்ந்த வானம், வானம் எங்கும் சுற்றி சுற்றி பறக்கும் காக்கை ஆந்தை பிணந்தின்னிகள்., அவள் படுக்கையோ திடீரென கல்லறையாய் மாறிப்போக., சுற்றி நிலமெங்கும் குருதியும் நரம்புகளும் மனித குடல்களும் மலங்களும் பினங்களுமாய் சிதறிக்கிடக்க., அதன் மேல் புழுக்களும் பூச்சிகளும் நெளிந்து கொண்டிருப்பதை கண்டால்., ஒரு பிணந்தின்னும் கழுகு அவள் அருகில் வந்து அவள் மயிரை பிடித்து இழுக்க., வலி தாங்காமல் அவளும் கத்த முயல்கிறாள்., அனால் அவள் வாய் திறக்க சத்தம் வெளி வராமல்., அவளால் அவள் கை கால்களையும் அசைக்க முடியாமல் திணறினாள்., தர்செயலேக திடீரென அவள் அருங்கில் மோகன் வந்ததை பார்த்தவள்., எப்படியோ எழுந்து அமர்ந்து அவன் மேல் ஷாந்தி வாந்தி எடுக்க அவன் சட்டை எங்கும் புழுக்கள் நெளிய, அவள் வாயிலிருந்து மன்புழுக்களாய் வழிய., ஊமையாக அலறினாள்., தலை தூக்கி பார்த்தால் மோகம் முகம் நரியென ரத்தம் வழிய அவள் கைகளை கால்களை கட்ட முயல., அவனின் ஓலம்., திடீரென அந்த உலகித்தில் பல நர்சுடை அணிந்த ஆந்தைகள்., கம்பௌண்டர் உடை பூண்ட வௌவால்கல், கோட் போட்ட நடை பினங்கலென்று, அவளை அந்த கல்லறை படுக்கையில் எல்லோருமாக சேர்ந்து அமுக்கி, ஏற்றிய ஊசியின் விளைவு, அவள் உடலை ஒவ்வொரு பாகங்களாய் கடித்து திங்க., அவர்கள் ஊற்றிய தண்ணீர் குருதி குருதி குருதி என அவள் முகம் முதற்கொண்டு தெறிக்க., அவளை தன்னிலைக்கு கொண்டு வர., மோகன் அவள் கன்னத்தில் பளீரென அறைய., மயங்கி விழுந்தாள் ஷாந்தி., சில மணி நேரங்கள் கழித்து சுய நினைவுக்கு திரும்பினால்., அவள் கண் திறக்க பயந்தால்., அவள் எவ்வுலகத்தில் இருக்கிறாள் என்று புரியாமல் துடிதுடித்தாள்., மோகனின் "ஷாந்தி ஷாந்தி" என்னும் காதல் குரல் கேட்டு மெதுவாக வாடிய பூ மலர்வதைப்போல் கண்விழித்தால்., " நான் என்ன தப்பு பண்ணினேன் மோகன் எதுக்காக எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது., பொறந்தப்பவே எங்க பாட்டியவும் அப்பாவையும் நான் தின்னுட்டுதான் பொறந்ததா அம்மா சொல்லி சொல்லி என்ன திட்டுகிட்டு இருந்தாங்க., அதுக்கு அப்புறம்.,  அம்மா புது கல்யாணம் பண்ணிகிட்டாங்க., என்ன வீட்ட விட்டு வெளிய துரத்திட்டாங்க., ரெண்டாவது அப்பா என் சித்தப்பா அவர் தப்பா ஓனே வேல வண்டிய ஒட்டி ஆக்சிடன்ட் பண்ணிட்டு ரெண்டு பேரும் அங்கேயே இறந்துட்டாங்க, அதுக்கு நான்தான் காரணம்னு சொன்னங்க, வீட்ட விட்டு ஓடிப் போய் சேந்த ஹாஸ்டல் சிஸ்டருக்கு திட்டீர்னு ஒரு நாள் காக்கா வலிப்பு வந்து இறந்து போனதுக்கு நான்தான் காரணம்னு., என்ன அந்த  ஹாஸ்டல்ல இருந்த வரைக்கும் எல்லாம்., ஆவி பிடிச்சவ, ரத்த காட்டேரி, மோகினின்னு எல்லாம் கூப்டுட்டு இருந்தாங்க., இப்படி நான் போற இடம் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சன என்ன சுத்திகிட்டே இருக்கு மோகன்., உன்னால என்ன காப்பாத்த முடியாதுடா., என்னாலையும் உயிர் வாழ முடியாது., பேசாம என்ன கொன்னுட்ரா., நான் செத்துர்றேன்., என்று சொல்ல., மோகன்" இந்த பார் ஷாந்தி., இது வரைக்கும் உன் வாழ்க்கைல உன்கூட யாரும் இல்லாம போயிருக்கலாம்., ஆனா இன்னைக்கு நான் இருக்கேன்., டாக்டர் கிட்ட பேசியிருக்கேன்பா அவங்க இதையெல்லாம் க்யூர் பண்ணிரலாம்னு சொல்லி இருக்காங்க., நீ எத பத்தியும் கவலை படாமா கண்ண மூடி தூங்கு எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்".,
என்று சொல்லி அவள் தலையை தடவி கொடுத்தவாறு ஆறுதல் சொல்லி அவளை மீண்டும் நித்திரைக்கு அனுப்பினான்., சில நாட்கள் சென்றது., எந்த பிரச்சனையும் இல்லை., அம்மாவாசை அன்று இரவு டிஸ்சார்ஜ் செய்து அவளை மீண்டும் வீட்டிற்க்கு அழைத்து சென்றான் மோகன்., இரவு சுமார் 12 .15  இருக்கும்.,
வெளிய இடியுடன் கூடிய பலத்த ஆடை மழை சூறை காற்றோடு மின்னல் வாலால் பிரபஞ்சத்தை உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க., கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சாந்தியின் மேல் துளி துளியாய் ஏதோ விழ தொடங்கியது., விழிகளை மெல்ல விழித்து பார்த்தால்., ஜன்னல் வழியே நுழைந்து அரை முழுதும் ஸீலிங்கிளிருந்து கொட்டி கொண்டிருந்தது சிவப்பு நிறத்தில் உதிரம்., குருதியின் கொடு மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது., அருகில் படுத்திருந்த மோகனை எழுப்ப முயல., அவளால் அவள் கைகளை தூக்க ஏன் அசைக்கவும் முடியவில்லை., ஓவென கத்த முயன்றும் அவளால் கத்த முடியாமல்., கண்ணீர் துளி அவள் விழியிலிருந்து வழிந்துகொண்டிருந்தது., இப்படி ஒவ்வொரு இரவும் அவளுக்கு நரகமாக தொடங்கின., எங்கு போனாலும் பயம் எதை கண்டாலும் பயம்., எதை கேட்டாலும் பயம்., அவள் ஐம்புலன்கள் அச்சத்திற்கு அடிமையாகி கிடந்ததை உணர்ந்தாள்.,
ஓர் இரவு மோகனுக்கு நைட் ஷிப்ட் என்பதால் அவள் தனியே இருக்கும் நிலைமை., அவனுக்கோ அவளை தனியே விட்டு செல்ல மனமில்லை., வீட்டில் பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் சொல்லி., கவனமாக பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி சென்றான்., அன்று இரவு சில மணி நேரம் பேசி கொண்டு இருந்துவிட்டு., கண் மூடி உறங்க தொடங்கினர்., சிறிது நேரம் கழித்து., ஏதோ சத்தம் வந்ததென எழுது பார்த்தால் வேலைக்காரி., அவள் கழுத்தை அவளே பிடித்து நெரித்து திணறி முக்கி முணங்கி கொண்டிருந்த சாந்தியை கண்டதும் பயத்தில் உறைந்து போனால் வேலைக்காரி., ஓடி வந்து சாந்தியை ஓங்கி பளாரென ஒரு அரை அறைந்தால்., சுருண்டி விழுந்தாள் ஷாந்தி., 



அருகில் சென்று மெல்ல கூந்தலை அகற்றி அவள் முகத்தில் நீர் தெளிக்க போகும் போது., திடீரென எழுந்து வேலைக்காரியை பிடித்து அவள் கழுத்து தொண்டையை கடித்து குருதி பீச்சி அடிக்க., தொண்டைகுழிவரை தின்று தீர்த்தாள்., அங்கேயே இறந்து போனால் அந்த அப்பாவி வேலைக்காரி., உதடுகளில் உதிரம் கசிய., கோரமாய் சிரித்து கொண்டிருந்தால் ஷாந்தி.,சிறிது நேரம் கழித்து., மெல்ல மெல்ல அவள் சுயநினைவு திரும்ப., அந்த பிணத்தை கண்டு., விக்கி விக்கி அழுது கொண்டிருந்தால் ஷாந்தி., சில நடு நிசி நாய்களின் ஊளையிடும் சத்தத்தோடு ., ஹாலில் ஓடி கொண்டிருந்த கடிகாரம் சரியாக பனிரெண்டு அடிக்க., பாத்ரூமில் துளி துளியாய் சொட்டி கொண்டிருந்தது பைப் தண்ணீர்., ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தால்., டிசம்பர் 26 நள்ளிரவில் அவளால் இறந்து போன., அல்லது அவள் கொன்ற அவளின் பாட்டி, முதலாவது மற்றும் இரண்டாவது அப்பன்., ஹாஸ்டல் சிஸ்டர், என்று தொடங்கி இன்று கொன்ற வேலைக்காரி வரை அனைவரும் கிழிந்த ஆடைகளும் உறைந்த உதிரங்களும்., பிதுங்கிய உருபுகளும் நசுங்கிய உருவங்களுமாய் அவளை நோக்கி வந்தனர் அல்லது வருவதை போல் அவள் உணர்ந்தால், கையில் கிடைத்த கத்தியை நீட்டி, வராதீங்க கிட்ட வராதீங்க என்று பிதற்றி கொண்டிருந்தால்., திடீரென என்ன மன்னிச்சுரு மோகன், நான் இருந்துதான உனக்கு பிரச்சன என்று கூறி., தன் கழுத்தை தானே சீவி தற்கொலை செய்து கொண்டால்., ஷாந்தி.,

இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாட்கள் கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் நடந்து நடந்து ஷாந்தி புத்தி ச்வாதீனமற்றவள் என்று ஊர்ஜிதமாக பெற்று அவளால் தான் இத்தனை விவகாரங்களும் என்று ஒரு வழியாக கேஸ் முடிந்தது., அனால் ஷாந்தி இறந்த போதே மோகனின் மனதில் சாந்தியும் இறந்து போனது., ஒவ்வொரு இரவும் மோகன் மெல்ல ஷாந்தி அவனிடம் பேசுவதை போலவும் அவள் அவனை தீண்டுவது போலவும் உணர ஆரம்பித்தான்., தினமும் ஆவியான தன் தேவியிடம் கொஞ்சி பேச தொடங்கினான்., நாட்கள் நகர்ந்தது., அடுத்த வருடம் டிசம்பர் 26 ராத்திரி பன்னிரண்டு மணி அளவில் சாந்திக்கு ஊஞ்சல் கட்டுகிறேன் என்று சொல்லி.,தனக்கு தானே தூக்கு மாட்டிகொண்டு இறந்து போனான்., மோகன்., 




இப்படி வேட்டைகளை தொடரும்,
ஷாந்தி.,

Saturday, February 12, 2011

எங்கனம் மறப்பேன்





எங்கனம் மறப்பேன் நண்பர்களே உங்களை எப்படி மறப்பேன்;
விவரம் தெரிந்த நாள் முதல் என்னோடு நடந்தவர்களை எப்படி நான் மறப்பேன்;
காலம் என்னை கோலம் ஆக்கிட புள்ளியான உங்களை நான் எப்படி மறப்பேன்;
பள்ளி காலம் முடிந்து கல்லூரி நுழைகிறேன் என எப்படி உங்களை நான் மறப்பேன்;

பள்ளிகூட நினைவுகளெல்லாம் நீங்களே இன்று நிறைந்தீர்கள்;
பதினான்கு வருட நட்பெனும் மழையில் கரையாமல் என்னோடு உறைந்தீர்கள்;
பல்பத்தில்ருந்து பேனா பந்து வரை அனைத்திலும் பங்கு தந்தீர்கள்;
பட்டாம் பூச்சி வேலி ஓணானென வட்டமிட்டு என்னோடு பிடித்தீர்கள்;

சைக்கள் டயரையும் ஒன்றாக ஓட்டினோம்;
ஸைன்ஸ் மாஸ்டரையும் செம்மையாக ஓட்டினோம்;
திருட்டுத்தனமாக தோப்பில் மாங்காக்களை சுருட்டினோம்;
தலைமை ஆசிரியரிடம் ஒன்றாக சேர்ந்து மாட்டினோம்;

கூட்டாஞ்சோறு சமைத்து பார்த்த அந்த ஆழமற நிழலை மறக்க முடியுமா;
காக்காய்க்கடி கடித்து பகிர்ந்த மிட்டாய் சுவை இனி பர்கர்களில் கிடைக்குமா;
கிரிகெட் மைதானத்தில் நம் தோசைகளை தின்ற நாய்குட்டிகள் நம்மை எதிர்பார்க்குமா;
காலத்தின் கலைநயத்தில் அரங்கேறிய நம் குறும் சண்டைகள் மீண்டும் திரும்புமா.,

மெல்ல வளர்ந்து வண்டறை பருவத்தில் நாம் புரிந்த லீலைகள் இன்றோடு தீர்ந்ததா.,
மாமா மச்சான் மாப்ள என்றினி யாரை அழைப்பினும் உங்களுக்கு நிகரன்று தெரியாதா.,
கழிவறை கவிதைகளும் கடைசி பென்ச்சில் கனவுகளும் இனி என்றும் நெஞ்சில் நிறையாதா;
மேடையில் நாமே நாயகன் நாயகி வில்லன் பாடகனென கலக்கிய நாட்கள் திரும்பாதா;

ஓட்டப்பந்தயம் கால்பந்து கூடைபந்தென பரிசுகள் குவித்தோம் எதற்கன்று,
குட்டி செவுற்றிலும் தேட்டர் க்யூவிலும் தேர்விலும் முதன்மை நாமே எதற்கென்று,
ஐவரும் ஒன்றாய் ஆடி திரிந்தோம் ஐம்புலன்கள் இழந்த வலி எனக்கின்று;
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் வந்து நின்றது நாம் பிரிவோமின்று;

மீண்டும் ஒரு நாள் சந்திப்போம் அந்த மழைக்காலத்தை அவ்வப்போது நினைத்திருப்போம்;
பொறுப்புகள் கடமைகள் நேரப்பற்றாக்குறைகள் எது இருப்பினும் அடிக்கடி சந்திப்போம்.,
வாழ்க்கை முடியும் நொடியில் நால்வரும் சுற்றி நிற்கட்டுமென இறைவனை வரம் கேட்போம்,
கால தேவனின் கோவிலில் சேர்ந்த பின்னும் இந்நட்பு நீடிக்க இறைவனை வரம் கேட்போம்

மீண்டும் ஐவரும் பூமியில் பிறந்தால் நம் நட்பை தொடர்ந்திடும் நம்பிக்கை கொண்டிருப்போம்;
சிரிப்பு துக்கம் திருட்டு தம் பழக்கம் என நாம் அனைத்திலும் மீண்டும் பங்கெடுப்போம்;
இதே பள்ளியில் நாம் நட்ட செடிகள் மரங்களாக அதனடியில் மீண்டும் சாய்ந்திருப்போம்;
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் நின்றது துளி கண்ணீரோடு நாம் பிரிவோம்.
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் நின்றது துளி கண்ணீரோடு நாம் பிரிவோம்.
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் நின்றது துளி கண்ணீரோடு நாம் பிரிவோம்.

Monday, January 24, 2011

கடுவுளை நம்பினோர் கைவிடப்படார்


MyFreeCopyright.com Registered & Protected



                     பனி மூடிய நகர காற்றில் பூவொன்று மெல்ல திறக்க கீழ்வானில் வந்த ஒளியில் சில கிளியினங்களும் குயில் மைனாக்களும் மாறி மாறி வானில் வட்டமிட்டு பூபாளம் பாடிக்கொண்டு இருக்க, மெல்ல மெல்ல நாகரீக வளர்ச்சியில் இயந்திரமாகி போன நர மனிதர்கள் துயில் எழுந்தனர்., என் வீட்டு அலாரம் என் மனைவி விஷாலாக்ஷி; வழக்கம் போல் அலற தொடங்கினால்., என் தூக்கமும் கலைந்தது.,

" விடிஞ்சது தெரியாம தூங்குறேல், அப்புறம் எப்படி ஸ்ரீதேவி வீடு தேடி வருவா., மூதேவிதான் மங்களம் பாடின்றுபா., நீங்களும் இருந்த கிளார்க் வேலைய நியாயம் தர்மம்னு  விட்டுட்டுடேள்., இப்ப என்னையும் வேலைக்கு போக விடமாட்டேங்குறேள்., நீங்களும் சீக்கரமா ஒரு வேலைக்கு சேர மாட்டேங்குறேல்., வீட்ட எப்படிதான் நடத்தறது சொல்லுங்கோ, இப்ப அந்த தர்மமும் நியாயமுமா வந்து நமக்கு அன்னம் போடுது" என்று வழக்கம் போல இன்று அவளின் சுப்ரபாதத்தை ஆரம்பித்தால்., எழுந்ததும் காலை கடன்களை முடித்துவிட்டு வந்தமர்ந்து,  அவள் லொட்டென வைத்து சென்ற காப்பியை குடித்து கொண்டு, கையில் கிடைத்த ஒரு பழைய பேப்பரை புரட்டி கொண்டு இருந்தேன்., ஓடி வந்து மகள் மீனாக்ஷி " அப்பா அப்பா எனக்கு ஸ்கூல்ல பீஸ் கட்ட நாளைக்குதான் கடைசு நாள்பா, ரெண்டு நாளா பீஸ் கட்டளைன்னு வெளிய வெயில்ல முட்டி போட வைக்குறாப்பா, நாளைக்கு கட்டலைன்னா  ஸ்கூல  விட்டு வெளிய அனுப்சுருவேன்னு சொல்றாப்பா., படிக்கறதும் படிப்ப சொல்லி தர்றதும் ஞானத்த வளர்கறதும் தர்மம்னு  பாட்டி சொல்றாளேபா, ஆனா தர்மம் பண்றதக்கும் பணம் கேக்குறாலே அவுங்க பண்றது தப்புதானப்பா" என்று சந்தேக வயதில் வசித்து வரும் 12 வயது சிறுமி கேட்டாள்., அவள் கேட்டு கொண்டிருக்கும்போதே அவசர அவசரமாக ஓடி வந்து விசாலாக்ஷி மகளை பிடித்து " லேட் ஆயின்ட்ருக்கு இங்க என்னடி கதை அடிசின்றுக்காய்., நீங்களாவது அவளுக்கு ஷூ போட்டு விடக் கூடாதான்னா"., என்று கேட்டு மீனாட்சியை இழுத்து பள்ளியில் விட்டு வர விசாலாக்ஷி சென்றால்.,  வீடு மழை பொழிந்து ஓய்ந்தது போல் இருந்தது., யார் கேள்விகளுக்கும் என்னிடம் விடை இல்லை., நாட்டை சூதாட்டத்தில் துலைத்த அரசனை போல் மனம் வெம்பியது.,
               தர்மம் நியாயம் கட்டுப்பாடு என்று வளர்ந்தவன்., யார் வம்பு தும்புக்கும் நான் செல்வதில்லை., என்னை தேடி ஒரு வம்பு வந்தது. காஞ்சிபுரம் டி,இ,ஓ. ஆபீசில் கிளார்க் வேலை பார்த்து வந்தேன், ஒரு வருடத்திற்கு முன்பு என்னிடம் ட்ரான்ஸபர் கேட்டு ஒரு ஆசிரியர் வந்திருந்தார்., அலுவகத்தில் அனைவரும் லஞ்சம் வாங்கி கையொப்பம் இட., நான் மட்டும் இடமாட்டேன் என்றேன்., காரணம் லஞ்சம், என்னிடம் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கவேண்டுமென்று நினைப்பவர்க்கு நான் என்றும் உதவியதில்லை., பணிவாக கேட்டால் கண்டிப்பாக செய்வதுண்டு, அது தெரியாமல் வந்து என்னிடம் லஞ்சம் கொடுத்து என்னை விலைக்கு வாங்க பார்த்த அவனிடம் கொஞ்சம் சரமாரியாக திட்டி அனுப்பிவிட்டேன்., அதையே மனதில் வைத்து கொண்டு ஒரு வாரம் கழித்து எனக்கு கீழே வேலை பார்க்கும் ப்யூனை விலைக்கு வாங்கி என் டேபல் டிராவில் ஒரு பணக் கட்டை வைத்து., லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைத்து என்னை மாட்டி விட்டு குளிர் காய்ந்தான் அந்த ஆசிரியர்., உடன் வேலை பார்பவரும் அவர்களுக்கு எதிராக நான் வேலை பார்கிறேன் என்று எனக்கு எதிராக சாட்சி சொன்னார்கள்., நானும் சிறைவாசத்தை ஒரு வாரம் அனுபவித்தேன்., வேலை இழந்தேன்., மாமனார் வந்து பைலில் வெளியே எடுத்தார்., வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை., வீட்டிலும் மரியாதை கிடைக்கவில்லை., சமூகத்திலும் நற்பெயர் இல்லை., ஊமையாகிய வௌவாளை போல் திரிந்தேன்.,

         அந்த நேரத்தில்தான் என்னோடு பள்ளியில் படித்த ஒரு நண்பனின் அறிமுகம் கிடைத்தது., மாரியப்பன், சவுண்ட் எஞ்சிநீரிங் படித்தவன்., ஒரு தனியார் சானலில் ஒலிபதிவாளராக  வேலை பார்த்து வருகிறான்., அங்கு ஒளிபரப்பாகும் ஒரு இந்தி ஸீரியலில் நடிக்கும் சில நடிகர்களுக்கு நான் தமிழில் குரல் கொடுக்கவேண்டுமென்று சில வாய்ஸ் டெஸ்டுகள் செய்து., அதை அவன் மேனேஜரிடம் ஒலிபரப்பு செய்து., எப்படியோ அடித்து பிடித்து, எனக்கு தின கூலிப்போல் ஒரு வேலை வாங்கி கொடுத்தான்.,
                     பெரிதாக பணம் ஒன்றும் புழங்காது., அரைமணி நேரம் நான் ஒரு டப்பிங் செய்து கொடுத்தால் ஐநூறு ரூபாய் கிடைக்கும்., வரும் பணம் வீட்டு வாடகைக்கும் தினசரி வீட்டு செலவுகளுக்குமே போதுவதில்லை., வேறு வேலை கிடைக்கும் வரை இங்கு வேலை செய்வோம் என்று வேலை செய்கிறேன்., இரண்டு நாட்களாக வர சொல்லி எந்த ஒரு காலும் இல்லை., சரி நாமே சென்று பாப்போம் என முடிவெடுத்தேன், இன்று அந்த அரைமணி நேரம் கூட கிடைக்குமா என்று தெரியவில்லை., மீனாட்சிக்கு பள்ளி கட்டணம், கிட்டத்தட்ட 2500 ரூபாய், கட்ட வேண்டும்., வேறு வழியில்லை, போய் பார்ப்போம் என்று ஏதோ ஒரு மன தைர்யத்தை வளர்த்து கொண்டு விஷாலாக்ஷி வீடு திரும்பியதும் புறப்பட்டேன்.,
                                  " ஹல்லோ வாங்க ரமணி சார்., இன்னைக்கு உங்கள வர சொல்லி கால் பண்ணிருந்தாங்களா.,?? " என்று அவளின் ரெஜிச்டரை புரட்டிக்கொண்டே, கேட்டால் அங்கு அமர்ந்திருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் நிஷா, " இல்ல நானாதான் வந்தேன்., எதாச்சும் டப்பிங் இருக்குங்களா" என்று ஒரு கூச்சத்தோடு வற்றிய குரலில் கேட்டேன்., " இல்லைங்களே இப்போதைக்கு எதுவும் இல்லை, இருந்தால் கண்டிப்பாக நாங்களே கூப்டிருப்போமே," என்று புன்னகைத்துக் கொண்டே தயக்கத்தோடுக் கூறினால், " அப்படியா" என்று இரண்டு நிமிடம் யோசித்து விட்டு, "மாரியப்பன் இருக்காருங்களா கொஞ்சம் பேசணும்", (ஒரு வேலை இருந்தால் அவனிடம் கடனாகவாவது வாங்கிக்கொண்டு போவோம் என்று கேட்டேன்,) "ஒரு நிமிஷம் இருங்க பாக்குறேன்" என்று கூறி அவன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் செய்தால், "அவன் இருக்க வேண்டும் அவன் இருக்க வேண்டும் அவன் இருக்க வேண்டும் " என்று மனதில் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன்., "லக்ஷ்மி அங்க மாரியப்பன் இருக்காருங்களா, அப்படியா, எப்ப வருவார், சரி சரி, சரி நீ கீழ வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொல்லி காலை கட் செய்தால், புரிந்துவிட்டது இருப்பினும் எப்பொழுது திரும்புவான் என்று கேட்டு போகலாமென காத்திருந்தேன்," சார் அவர் இல்லைங்கலாம், ஷூட்டிங் விஷயமா ஆந்த்ரா போயிருகாராம், வர்றதுக்கு இன்னும் மூணு நாள் ஆகுமாம்" என்று கூறினால், " சரிமா ஏதாவது சான்ஸ் இருந்தா உடனே கொஞ்சம் கூப்டு, எங்க எப்ப இருந்தாலும் வர்றேன்" என்று கூறி மெல்ல அங்கிருந்து வெளியேறினேன், உலகமே புதிராக தெரிந்தது, உலகத்தில் கடந்து போகும் மனிதர்களின் கண்கள் மாற்றி மாற்றி என்னை மட்டுமே காண்பதாக தோன்றியது, யாரோ யாரிடமோ கேட்கும் கேள்விகள் என்னிடம் கேட்பதை போல் இருந்தது, யாரோ யாரையோ பார்த்து சிரிக்கும் சிரிப்பு என்னை இளக்காரமாக கிண்டலடிபதை போல் இருந்தது, மாறி காலத்தில் நரி ஓநாய் காக்காய் பிணந்தின்னி என்ற மிருகங்கள் சிங்கத்து குகை முன் நின்று குத்தாட்டம் அடிப்பதைப்போல், காட்டேரி பேய் பிசாசு ஆவிகள் சாத்தான்கள், ஆண்டவனின் ஆலயத்தின் முன் இறைவன் உறங்கும் நடு ராத்திரியில் பேயாட்டம் போடுவதைப்போல் ஒரு சூது கவ்விய உணர்வு என் மனதில்,   உத்தியோகம் புருஷ லக்ஷணம்  அது இல்லாத நான் ஆண் தானா ஒரு குடும்ப தலைவன் தானா, என்ற பல அற்ப கேள்விகள் எனக்குள், அருகில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தேன்.
அங்கு சென்று அந்த கல்லுக்குள் கல்லாகி அமர்ந்திருக்கும் கடவுளை கண்டு மனதில் இருப்பதை கொட்டி தீர்த்தேன், " நான் அப்படி என்ன பாவம் பண்ணினேன், வாழ்க்கைல உண்மையா நியாயமா வாழணும்னு நெனச்சது தப்பா நோக்கே என்ன தண்டிக்கறது பாவம்னு தோணலையா, தப்பு பண்ணிட்டு உன் உண்டியல்ல வந்து பணத்த போட்டு போறவாள எல்லாம் நன்னா வச்சுருக்க, கடுவுளே இல்லைங்கற கூட்டத்தையும் நன்னா வச்சுருக்க, என்ன மட்டும் ஏன் இப்படி சோதிக்கிற,நாளைக்கு  கேஸ் கோர்டுக்கு வர்றது., இன்னைக்கு  காலைல மீனாக்ஷி கேட்ட கேள்விக்கு என்னாண்ட பதில் இல்லை, உன்னாண்ட இருக்கோல்யோ , உன் சோதனைய உன் பக்தர்களோடு நிருத்திக்காமா அவங்கள சார்ந்திருக்கறவங்களையும் சோதிக்கிரியே இது நோக்கே பாவமா தெரியலையா, மனுஷாளா பொறந்துட்டா பொறுமை வேணும், ஆனா அந்த பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு,  இப்படி நீ சோதிச்சு சோதிச்சுத்தான், உலகத்துல பாதிபேர் அநியாயத்துக்கு தல வணங்கிட்ட, உன்ன கும்புட்றத நிறுத்திட்டா, சிலர் தற்கொலை கொலைன்னு எறங்கிட்டா, எனக்கு இன்னைக்குள்ள ஒரு வழிய நீ காட்டலைன்னா",என்று சில மணித்துளிகள் வாய்விட்டு அழுதுவிட்டு., என்ன பண்றது நேக்கும் தெரியல, பொறந்தப்பவே என் அப்பா அம்மா எல்லாத்தையும் பறிச்சுட்ட, உன்ன மட்டுமே வணங்கிண்டு வர்றேன், நீ மட்டும் தானே எனக்கு எல்லாமே, தயவு செஞ்சு உன் திருவிளையாடல நிறுத்திட்டு என்ன காப்பாத்து, உன் பிள்ளைய காப்பாத்து" என்று பலவாறு அழுது, அவன் பாதத்தில் சரணடைந்தேன்., மாலை வரை அருகில் இருந்த பார்க்கில் அமர்ந்து என் மொபைலில் உள்ள நண்பர்கள் நம்பர்களுக்கு கால் செய்து செய்து பாதி பேர் உதவ மறுத்தனர், பாதி பேர் என் காலுக்கு பதில் அளிக்கவே மறுத்தனர், திடீரென்று ஒரு கால், எடுத்து பார்த்தேன் விஷாலாக்ஷி " ஏன்னா எங்க இருக்கேள், இன்னைக்கு மீனாக்ஷியோட மிஸ்ஸ பாத்து பேசினேன், அவா நாளைக்குள்ள பணம் கட்டலன்னா ஸ்கூல்ல இருந்து நிருத்திருவேன்னு சொல்லிட்டா, பணமேதும் ரெடி ஆச்சா, இல்ல நான் வேணும்னா தோப்பனாராண்ட கேக்கவா.," என்று கேட்டாள் விசாலாக்ஷி, " இல்லடி ஒரு எடத்துல ரெடி பண்ணி இருக்கேன் நாளைக்கு காலைல கெடச்சுரும், நான் பாத்துக்குறேன்" என்று அப்பொழுதும் ஒரு வீராப்போடு பேசினேன்,
வெறும் கையோடு திரும்ப மனசில்லை, கையில் இருந்த 50 பைசாவிற்கு ஒரு சாக்லேட் வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கு வந்து மீனாட்சியிடம் அதை கொடுத்துவிட்டு, கோவிலில் கொடுத்த பூவையும் பொட்டையும் விஷாலாக்ஷியிடம் கொடுத்தேன், அவ்வளவுதான் முடிந்தது,  இன்று ஒரு நாள் கழிந்தது, என இரவு சாப்பிட்டு மகிழ்ச்சியெனும் விளக்கை அனைத்து தொல்வி எனும் பாயில் படுத்து நம்பிக்கையெனும் விழிமூடி உறங்கலானேன்.,
நள்ளிரவில் ஒரு கால், அந்த தொலைக்காட்சி நிறுவனத்து ரிசப்ஷனிஸ்ட் நம்பரிலிருந்து, " சார் நான் முருகன் பேசுறேன் அர்ஜண்டா உங்கள வரசொன்னாங்க,வர வேண்டிய ஹீரோவோட மேல் வாய்ஸ் இன்னைக்கு வரல, காலைல டெலிகாஸ்ட் பண்ணனும், ரெண்டு ஆங்கில படத்துக்கு டப்பிங் முடிச்சாகணும், உடனே வர சொன்னாங்க", என்றான், " இந்த வந்துட்டேன் ஒரு 20 நிமிஷத்துல அங்க இருப்பேன்" ., என்று சொல்லி விரைந்தேன்
இரண்டு படம் என்றால் குறைந்தது 1500-2000 ரூபாயாவது கிடைக்கும், இன்னொரு ஆயிரம் ரூபாய்க்கு கடைசியாக மிச்சமிருக்கும் வெள்ளி பூஜை சாமான்களை அடகு வைத்து மீனாட்சியின் கட்டணத்தை கட்டி விடலாம், என்று முடிவு கட்டி., உடனே விரைந்தேன்., இரவு முழுதும் வேலை பார்த்து காலை 8 மணிக்குள் இரண்டு படங்களுக்கு டப்பிங் கொடுத்து, 14 விளம்பரங்களுக்கும் டப்பிங் முடித்தேன், 3000 வாங்கிவிட்டேன்., இனி பூஜை சாமான்களை அடகு வைக்கவேண்டியதில்லை என்ற ஒரு தெம்போடு கிளம்பினேன்,  வெளியே போகும் போது., கடந்து போன எம்.டி திடீரெண்டு அழைத்து "ரொம்ப நன்றி கரக்டான நேரத்துக்கு வந்து ஹெல்ப் பண்ணீங்க., நீங்க வேலை தேடிகிட்டு இருக்கறதா கேள்வி பட்டேன், உங்களுக்கு ஆட்ச்யபனை இல்லைன்னா., எங்க சானல்ல ஒரு புது ப்ரோக்ராம் ஆரம்பிக்க போறோம்., 108 திவ்ய தேசங்கல்னு, வாரத்துக்கு ரெண்டு நாள்., அதுக்கு நீங்களே டைரெக்டராவும் ஆண்கராவும் இருந்துடுங்களேன்., மாசத்துக்கு 20,000 தர்றோம் அந்த ப்ரோக்ராமுக்கு அப்புறம் வேற ப்ரோக்ராமுக்கு உங்கள மாத்துறோம்., உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னா., நாளைக்கே நீங்க ஜாய்ன் பண்ணலாம்" என்றார்., பூவின் இதழ்களில் பனி படர்ந்தது போல் மனம் சிலிர்த்தது., உடனே ஒப்புக்கொண்டேன்., அன்று கோர்டில் ஆஜரானேன்., நான் நிரபராதி என்று நிரூபணம் ஆகி விடுதலை செய்யப்பட்டு ஏன் வேலை எனக்கு திரும்பவும் கிடைக்கப்பெற்றது., அரம்தனை சூது கவ்வும் மீண்டும் அறமே வெல்லும் என்பதும் நிரூபணம் ஆனது., ஆனால் மீண்டும் அந்த சேற்றில் சில செந்தாமரைகளோடு சேர்வதைவிட., இந்த பூந்தோட்டதிலேயே தங்கிவிட முடிவு செய்தேன்.,
என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை,
செய்நன்றி கொன்ற மகற்கு.,
என்று அந்த சானலிலேயே டைரக்டராய் மீண்டும் சேர்ந்தேன்.,
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்., என்னும் வாக்கியம் ஊர்ஜிதமானது., நானும் அன்றைய நாளே மீனாட்சியின் பள்ளி கட்டனத்தயும் கட்டினேன்., அடுத்த நாளே வேலைக்கு சேர்ந்தேன்., வாழ்க்கை நல்லபடியாய் அவன் இச்சைப்படி ஆரம்பித்தேன்., 

இப்படிக்கு,
ரமணி சௌந்தரராஜன்.

Thursday, January 20, 2011

நினைவெனும் இருட்டு

MyFreeCopyright.com Registered & Protected






கருவறை  இருட்டு பத்து மாதம் வரை;
கல்லறை இருட்டு மீண்டும் பிறக்கும் வரை;
அன்பே உன் காதல் கவ்வியோ இருட்டோ;
என் நினைவென்னும் அழியாத உயிர்;
உயிரோடு உயிர் வாழும் வரை.,

Sunday, January 9, 2011

கவிதைகள் மலர்ந்தது.,



சிறகடித்து பறந்த ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
ஒரே நொடியில் நெருப்பில் பொசுங்கியது.,
அன்று பிறந்த வெள்ளை முயலொன்று
மதங்கொண்டு களிறின் காலடியில் நசுங்கியது,
சிதறு தேங்காயாய் உடைந்த என் நினைவுகளை
நிகழ் காலம் பொருக்கி கையில் தந்தது,
நீ எவனையோ மணந்திட என் காதல் இறந்திட
கண்ணீரில் கவிதைகள் மெல்ல மெல்ல மலர்ந்தது.,