பெசன்ட் நகரில் 29 டிசம்பர் 2010, புதன் கிழமை காலை பத்து மணி, ஸ்ட்ரெச்சரில் ஒரு ஆண் பிணத்தை எடுத்து அம்புலன்சி ல் ஏற்ற, சுற்றி மலத்தில் ஈக்கள் போல மொய்த்துக் கொண்ட நர மனிதர்கள் கூட்டத்தை அப்புற படுத்திக் கொண்டிருந்தனர் போலீசார், வீட் டுக்குள் யாரும் இல்லை சிலந்தி பின்னிய வலைகளும் , உடைந்து நொறுங்கிய சிலைகளும், மூன்று நாளில் மூளை முடுக்குகளில் பரவி விட்ட ஒரு பிணத்தின் வாடையும்தான் அந்த பாழடைந்த வீட்டை படை எடுத்திருந்தது, இந்த வீட்டிலிருந்தது மோகன். பி.பி.ஓ கம்பனியில் வேலை பார்த்து வந்த ஒரு படித்த பொறியியல் பட்டதாரிக்கு ஏன் இந்த நிலைமை; அவன் எதற்காக தூக்கி மாட்டி இறக்க வேண்டும்.,
இவன் வாழ்கையை சில வருடங்களுக்கு முன்பு சென்று பார்ப்போம்.,
மும்பையில் படித்து சென்னைக்கு வேலை பார்க்க வந்த மோகனின் தாய் தந்தையர் மும்பை தமிழர்கள்., ஆனால் பாவம் அவன் பள்ளிக்கூடம் முடிக்கும் முன்னமே அவர்கள் இறந்து போயினர்., அவன் மாமாதான் அவனை வளர்த்தார்., அவன் அப்பாவின் சொத்தை முழுவதுமாக சுருட்டி விட்டு., இவன் வாயை மூட., சென்னையில் பெசன்ட் நகரில் ஒரு அபார்ட்மென்ட் வீடு விலைக்கு வாங்கி கொடுத்தார்.,
மோகனுக்கு சென்னைக்கு வந்த போது அவன் வேலை பார்க்கும் கால் சென்டரில், கூட வேலைக்கு சேர்ந்தாள் ஒரு பெங்களூர் பெண் ஷாந்தி.,
இருவருமாக காதலில் விழுந்து காதல் முத்திய நிலையில் லிவ்-இன் ரெலேஷன் ஷிப் வைத்துக் கொண்டனர்., அதாவது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆறு மாதமோ ஒரு வருடமோ ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து கிட்ட தட்ட தாம்பத்ய வாழ்கையை ஒத்திகை பார்க்கும் புது வித மேற்கத்திய கலாசாரம்., அவளுக்கோ கேட்பதற்கு என்று யாருமில்லை., அவளின் 6 வது வயதிலேயே., அவளின் தந்தை இறந்து போக, அவளுக்கு 8 ஆம் வயது ஆகும் போது அவளின் அம்மா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள., அவளை வீட்டைவிட்டு வெளியேற்றினான் அவளின் இரண்டாம் தகப்பன்., கேட்பதற்கு நாதியின்று ஒரு அனாதையார் ஆஸ்ரமத்தில் வளரந்தவள் எப்படியோ இன்று அதே அனாதை ஆஸ்ரமத்திற்கு கொடை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டால்., மோகன் சாத்திரங்களில் நம்பிக்கை இல்லாதவன் என்பதால்., வீட்டிற்கு க்ரஹப்ரவேசம் பால் காய்ச்சுதல் என்று எந்த ஒரு விழாவும் இன்றி அமைதியாக இருவரும் புது மனையில் புகுந்தனர்.,
ஆரம்பத்தில் சில நாட்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை., சாந்தமாக போய்க்கொண்டிருந்தது புது மனை வாழ்க்கை., அந்த ஒரு சம்பவம் நடக்கும் வரையில்..,
மாடியில் ஒரு நாள் இரவு பதினோரு மணி அளவு., கொடியில் காற்றோடு காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுக்க சென்றால்., திடீரென கரண்ட் கட் ஆனதில் லிப் டில் வர இயலாமல் அங்கிருந்து 8 ஆம் மாடி வரை இறங்கி வர முனைந்தால்., இறங்கி வரும் போது அவள் பின்னிருது யாரோ தள்ளி விட்டதை போல் இருக்க கால் தடுக்கி மாடி படிகளில் இருந்து உருண்டு விழுந்தாள் ஷாந்தி., அவள் கைகளை கம்பி போன்ற மயிர்கள இழுத்து செல்வதைப்போல் உணர்ந்தால்., அவளை கத்த விடாமல் ஒரு கழிமண்ணில் குழைத்து பிணத்தின் மேல் ஊரும் புழுக்கள் போல மறு கை அவள் வாயை மூடியதை கண்டால்., தர தர தரவென அவளை படிகளில் இருந்து இழுத்து அவள் வாசப்படியிடம் வருவதற்குள் கரண்ட் வந்துவிட., திடீரென உருவங்கள் காணாமல் போயின., ஏதோ உருண்டு விழும் சத்தம் கேட்டு ஓடி வந்த அபார்ட்மென்ட்காரர் அவள் முதுகு பக்கம் பேண்ட்டும் டி-ஷிர்டும் கிழிந்து ரத்த வெள்ளத்தில் அவள் மிதந்திருப்பதை கண்டு கத்தி கூச்சல் போட்டு அனைவரையும் வரவழைத்தார்., மோகன் ஓடி வந்து ஒரு போர்வையால் அவளை மூடி சுருட்டி அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தான்., மயங்கி கிடந்த அவளுக்கு சுய நினைவு திரும்ப இரண்டு நாட்கள் ஆனது., சுய நினைவு திரும்பிய உடன் மோகன் அருகில் அமர்ந்திருக்க அவனை கட்டிபிடித்து கதறினால்., அவளை சமாதான படுத்திவிட்டு நடந்தவை கலை கேட்டான் மோகன்., அவளும் முழுதாக விவரிக்க., அவன் கோவத்தில் யாரோ திருடர்கள் வந்திருப்பார்கள் நீயாக எதையோ கற்பனை செய்துக்கொள்ளாதே., ஆவியும் இல்லை ஆண்டவனும் இல்லை., பேய் பிசாசு என்று பைத்தியக்கரத்தனமாக பேசாமல் படுத்து ஓய்வெடுத்துக்கொள்., சில நாட்களுக்கு நீ கம்பனிக்கு வர வேண்டாம்., நான் டீம் லீடரிடம் பேசிக்கொள்கிறேன்., உன்னை பார்த்துக்கொள்ள ஒரு நர்சை ஏற்பாடு செய்துள்ளேன்., வீணாக எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் முதலில் உறங்கு என்று பேசி அவளுக்கு ஒரு அசட்டு தைரியம் கொடுத்து உறங்க செய்தான்.,
சுமார் மூன்று மணி இருக்கும்., கீச் கீச் என காது ஜவ்வுகளை கிழிக்கும் ஒரு சத்தம்., எழுந்து பார்த்தால் ஒரே வெட்டவெளி, கார் மேகங்கள் சூழ்ந்த வானம், வானம் எங்கும் சுற்றி சுற்றி பறக்கும் காக்கை ஆந்தை பிணந்தின்னிகள்., அவள் படுக்கையோ திடீரென கல்லறையாய் மாறிப்போக., சுற்றி நிலமெங்கும் குருதியும் நரம்புகளும் மனித குடல்களும் மலங்களும் பினங்களுமாய் சிதறிக்கிடக்க., அதன் மேல் புழுக்களும் பூச்சிகளும் நெளிந்து கொண்டிருப்பதை கண்டால்., ஒரு பிணந்தின்னும் கழுகு அவள் அருகில் வந்து அவள் மயிரை பிடித்து இழுக்க., வலி தாங்காமல் அவளும் கத்த முயல்கிறாள்., அனால் அவள் வாய் திறக்க சத்தம் வெளி வராமல்., அவளால் அவள் கை கால்களையும் அசைக்க முடியாமல் திணறினாள்., தர்செயலேக திடீரென அவள் அருங்கில் மோகன் வந்ததை பார்த்தவள்., எப்படியோ எழுந்து அமர்ந்து அவன் மேல் ஷாந்தி வாந்தி எடுக்க அவன் சட்டை எங்கும் புழுக்கள் நெளிய, அவள் வாயிலிருந்து மன்புழுக்களாய் வழிய., ஊமையாக அலறினாள்., தலை தூக்கி பார்த்தால் மோகம் முகம் நரியென ரத்தம் வழிய அவள் கைகளை கால்களை கட்ட முயல., அவனின் ஓலம்., திடீரென அந்த உலகித்தில் பல நர்சுடை அணிந்த ஆந்தைகள்., கம்பௌண்டர் உடை பூண்ட வௌவால்கல், கோட் போட்ட நடை பினங்கலென்று, அவளை அந்த கல்லறை படுக்கையில் எல்லோருமாக சேர்ந்து அமுக்கி, ஏற்றிய ஊசியின் விளைவு, அவள் உடலை ஒவ்வொரு பாகங்களாய் கடித்து திங்க., அவர்கள் ஊற்றிய தண்ணீர் குருதி குருதி குருதி என அவள் முகம் முதற்கொண்டு தெறிக்க., அவளை தன்னிலைக்கு கொண்டு வர., மோகன் அவள் கன்னத்தில் பளீரென அறைய., மயங்கி விழுந்தாள் ஷாந்தி., சில மணி நேரங்கள் கழித்து சுய நினைவுக்கு திரும்பினால்., அவள் கண் திறக்க பயந்தால்., அவள் எவ்வுலகத்தில் இருக்கிறாள் என் று புரியாமல் துடிதுடித்தாள்., மோகனின் "ஷாந்தி ஷாந்தி" என்னும் காதல் குரல் கேட்டு மெதுவாக வாடிய பூ மலர்வதைப்போல் கண்விழித்தால்., " நான் என்ன தப்பு பண்ணினேன் மோகன் எதுக்காக எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது., பொறந்தப்பவே எங்க பாட்டியவும் அப்பாவையும் நான் தின்னுட்டுதான் பொறந்ததா அம்மா சொல்லி சொல்லி என்ன திட்டுகிட்டு இருந்தாங்க., அதுக்கு அப்புறம்., அம்மா புது கல்யாணம் பண்ணிகிட்டாங்க., என்ன வீட்ட விட்டு வெளிய துரத்திட்டாங்க., ரெண்டாவது அப்பா என் சித்தப்பா அவர் தப்பா ஓனே வேல வண்டிய ஒட்டி ஆக்சிடன்ட் பண்ணிட்டு ரெண்டு பேரும் அங்கேயே இறந்துட்டாங்க, அதுக்கு நான்தான் காரணம்னு சொன்னங்க, வீட்ட விட்டு ஓடிப் போய் சேந்த ஹாஸ்டல் சிஸ்டருக்கு திட்டீர்னு ஒரு நாள் காக்கா வலிப்பு வந்து இறந்து போனதுக்கு நான்தான் காரணம்னு., என்ன அந்த ஹாஸ்டல்ல இருந்த வரைக்கும் எல்லாம்., ஆவி பிடிச்சவ, ரத்த காட்டேரி, மோகினின்னு எல்லாம் கூப்டுட்டு இருந்தாங்க., இப்படி நான் போற இடம் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சன என்ன சுத்திகிட்டே இருக்கு மோகன்., உன்னால என்ன காப்பாத்த முடியாதுடா., என்னாலையும் உயிர் வாழ முடியாது., பேசாம என்ன கொன்னுட்ரா., நான் செத்துர்றேன்., என்று சொல்ல., மோகன்" இந்த பார் ஷாந்தி., இது வரைக்கும் உன் வாழ்க்கைல உன்கூட யாரும் இல்லாம போயிருக்கலாம்., ஆனா இன்னைக்கு நான் இருக்கேன்., டாக்டர் கிட்ட பேசியிருக்கேன்பா அவங்க இதையெல்லாம் க்யூர் பண்ணிரலாம்னு சொல்லி இருக்காங்க., நீ எத பத்தியும் கவலை படாமா கண்ண மூடி தூங்கு எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்".,
என்று சொல்லி அவள் தலையை தடவி கொடுத்தவாறு ஆறுதல் சொல்லி அவளை மீண்டும் நித்திரைக்கு அனுப்பினான்., சில நாட்கள் சென்றது., எந்த பிரச்சனையும் இல்லை., அம்மாவாசை அன்று இரவு டிஸ்சார்ஜ் செய்து அவளை மீண்டும் வீட்டிற்க்கு அழைத்து சென்றான் மோகன்., இரவு சுமார் 12 .15 இருக்கும்.,
வெளிய இடியுடன் கூடிய பலத்த ஆடை மழை சூறை காற்றோடு மின்னல் வாலால் பிரபஞ்சத்தை உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க., கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சாந்தியின் மேல் துளி துளியாய் ஏதோ விழ தொடங்கியது., விழிகளை மெல்ல விழித்து பார்த்தால்., ஜன்னல் வழியே நுழைந்து அரை முழுதும் ஸீலிங்கிளிருந்து கொட்டி கொண்டிருந்தது சிவப்பு நிறத்தில் உதிரம்., குருதியின் கொடு மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது., அருகில் படுத்திருந்த மோகனை எழுப்ப முயல., அவளால் அவள் கைகளை தூக்க ஏன் அசைக்கவும் முடியவில்லை., ஓவென கத்த முயன்றும் அவளால் கத்த முடியாமல்., கண்ணீர் துளி அவள் விழியிலிருந்து வழிந்துகொண்டிருந்தது., இப்படி ஒவ்வொரு இரவும் அவளுக்கு நரகமாக தொடங்கின., எங்கு போனாலும் பயம் எதை கண்டாலும் பயம்., எதை கேட்டாலும் பயம்., அவள் ஐம்புலன்கள் அச்சத்திற்கு அடிமையாகி கிடந்ததை உணர்ந்தாள்.,
ஓர் இரவு மோகனுக்கு நைட் ஷிப்ட் என்பதால் அவள் தனியே இருக்கும் நிலைமை., அவனுக்கோ அவளை தனியே விட்டு செல்ல மனமில்லை., வீட்டில் பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் சொல்லி., கவனமாக பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி சென்றான்., அன்று இரவு சில மணி நேரம் பேசி கொண்டு இருந்துவிட்டு., கண் மூடி உறங்க தொடங்கினர்., சிறிது நேரம் கழித்து., ஏதோ சத்தம் வந்ததென எழுது பார்த்தால் வேலைக்காரி., அவள் கழுத்தை அவளே பிடித்து நெரித்து திணறி முக்கி முணங்கி கொண்டிருந்த சாந்தியை கண்டதும் பயத்தில் உறைந்து போனால் வேலைக்காரி., ஓடி வந்து சாந்தியை ஓங்கி பளாரென ஒரு அரை அறைந்தால்., சுருண்டி விழுந்தாள் ஷாந்தி.,
அருகில் சென்று மெல்ல கூந்தலை அகற்றி அவள் முகத்தில் நீர் தெளிக்க போகும் போது., திடீரென எழுந்து வேலைக்காரியை பிடித்து அவள் கழுத்து தொண்டையை கடித்து குருதி பீச்சி அடிக்க., தொண்டைகுழிவரை தின்று தீர்த்தாள்., அங்கேயே இறந்து போனால் அந்த அப்பாவி வேலைக்காரி., உதடுகளில் உதிரம் கசிய., கோரமாய் சிரித்து கொண்டிருந்தால் ஷாந்தி.,சிறிது நேரம் கழித்து., மெல்ல மெல்ல அவள் சுயநினைவு திரும்ப., அந்த பிணத்தை கண்டு., விக்கி விக்கி அழுது கொண்டிருந்தால் ஷாந்தி., சில நடு நிசி நாய்களின் ஊளையிடும் சத்தத்தோடு ., ஹாலில் ஓடி கொண்டிருந்த கடிகாரம் சரியாக பனிரெண்டு அடிக்க., பாத்ரூமில் துளி துளியாய் சொட்டி கொண்டிருந்தது பைப் தண்ணீர்., ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தால்., டிசம்பர் 26 நள்ளிரவில் அவளால் இறந்து போன., அல்லது அவள் கொன்ற அவளின் பாட்டி, முதலாவது மற்றும் இரண்டாவது அப்பன்., ஹாஸ்டல் சிஸ்டர், என்று தொடங்கி இன்று கொன்ற வேலைக்காரி வரை அனைவரும் கிழிந்த ஆடைகளும் உறைந்த உதிரங்களும்., பிதுங்கிய உருபுகளும் நசுங்கிய உருவங்களுமாய் அவளை நோக்கி வந்தனர் அல்லது வருவதை போல் அவள் உணர்ந்தால், கையில் கிடைத்த கத்தியை நீட்டி, வராதீங்க கிட்ட வராதீங்க என்று பிதற்றி கொண்டிருந்தால்., திடீரென என்ன மன்னிச்சுரு மோகன், நான் இருந்துதான உனக்கு பிரச்சன என்று கூறி., தன் கழுத்தை தானே சீவி தற்கொலை செய்து கொண்டால்., ஷாந்தி.,
இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாட்கள் கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் நடந்து நடந்து ஷாந்தி புத்தி ச்வாதீனமற்றவள் என்று ஊர்ஜிதமாக பெற்று அவளால் தான் இத்தனை விவகாரங்களும் என்று ஒரு வழியாக கேஸ் முடிந்தது., அனால் ஷாந்தி இறந்த போதே மோகனின் மனதில் சாந்தியும் இறந்து போனது., ஒவ்வொரு இரவும் மோகன் மெல்ல ஷாந்தி அவனிடம் பேசுவதை போலவும் அவள் அவனை தீண்டுவது போலவும் உணர ஆரம்பித்தான்., தினமும் ஆவியான தன் தேவியிடம் கொஞ்சி பேச தொடங்கினான்., நாட்கள் நகர்ந்தது., அடுத்த வருடம் டிசம்பர் 26 ராத்திரி பன்னிரண்டு மணி அளவில் சாந்திக்கு ஊஞ்சல் கட்டுகிறேன் என்று சொல்லி.,தனக்கு தானே தூக்கு மாட்டிகொண்டு இறந்து போனான்., மோகன்.,
இப்படி வேட்டைகளை தொடரும்,
ஷாந்தி.,
No comments:
Post a Comment