Saturday, February 12, 2011

எங்கனம் மறப்பேன்





எங்கனம் மறப்பேன் நண்பர்களே உங்களை எப்படி மறப்பேன்;
விவரம் தெரிந்த நாள் முதல் என்னோடு நடந்தவர்களை எப்படி நான் மறப்பேன்;
காலம் என்னை கோலம் ஆக்கிட புள்ளியான உங்களை நான் எப்படி மறப்பேன்;
பள்ளி காலம் முடிந்து கல்லூரி நுழைகிறேன் என எப்படி உங்களை நான் மறப்பேன்;

பள்ளிகூட நினைவுகளெல்லாம் நீங்களே இன்று நிறைந்தீர்கள்;
பதினான்கு வருட நட்பெனும் மழையில் கரையாமல் என்னோடு உறைந்தீர்கள்;
பல்பத்தில்ருந்து பேனா பந்து வரை அனைத்திலும் பங்கு தந்தீர்கள்;
பட்டாம் பூச்சி வேலி ஓணானென வட்டமிட்டு என்னோடு பிடித்தீர்கள்;

சைக்கள் டயரையும் ஒன்றாக ஓட்டினோம்;
ஸைன்ஸ் மாஸ்டரையும் செம்மையாக ஓட்டினோம்;
திருட்டுத்தனமாக தோப்பில் மாங்காக்களை சுருட்டினோம்;
தலைமை ஆசிரியரிடம் ஒன்றாக சேர்ந்து மாட்டினோம்;

கூட்டாஞ்சோறு சமைத்து பார்த்த அந்த ஆழமற நிழலை மறக்க முடியுமா;
காக்காய்க்கடி கடித்து பகிர்ந்த மிட்டாய் சுவை இனி பர்கர்களில் கிடைக்குமா;
கிரிகெட் மைதானத்தில் நம் தோசைகளை தின்ற நாய்குட்டிகள் நம்மை எதிர்பார்க்குமா;
காலத்தின் கலைநயத்தில் அரங்கேறிய நம் குறும் சண்டைகள் மீண்டும் திரும்புமா.,

மெல்ல வளர்ந்து வண்டறை பருவத்தில் நாம் புரிந்த லீலைகள் இன்றோடு தீர்ந்ததா.,
மாமா மச்சான் மாப்ள என்றினி யாரை அழைப்பினும் உங்களுக்கு நிகரன்று தெரியாதா.,
கழிவறை கவிதைகளும் கடைசி பென்ச்சில் கனவுகளும் இனி என்றும் நெஞ்சில் நிறையாதா;
மேடையில் நாமே நாயகன் நாயகி வில்லன் பாடகனென கலக்கிய நாட்கள் திரும்பாதா;

ஓட்டப்பந்தயம் கால்பந்து கூடைபந்தென பரிசுகள் குவித்தோம் எதற்கன்று,
குட்டி செவுற்றிலும் தேட்டர் க்யூவிலும் தேர்விலும் முதன்மை நாமே எதற்கென்று,
ஐவரும் ஒன்றாய் ஆடி திரிந்தோம் ஐம்புலன்கள் இழந்த வலி எனக்கின்று;
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் வந்து நின்றது நாம் பிரிவோமின்று;

மீண்டும் ஒரு நாள் சந்திப்போம் அந்த மழைக்காலத்தை அவ்வப்போது நினைத்திருப்போம்;
பொறுப்புகள் கடமைகள் நேரப்பற்றாக்குறைகள் எது இருப்பினும் அடிக்கடி சந்திப்போம்.,
வாழ்க்கை முடியும் நொடியில் நால்வரும் சுற்றி நிற்கட்டுமென இறைவனை வரம் கேட்போம்,
கால தேவனின் கோவிலில் சேர்ந்த பின்னும் இந்நட்பு நீடிக்க இறைவனை வரம் கேட்போம்

மீண்டும் ஐவரும் பூமியில் பிறந்தால் நம் நட்பை தொடர்ந்திடும் நம்பிக்கை கொண்டிருப்போம்;
சிரிப்பு துக்கம் திருட்டு தம் பழக்கம் என நாம் அனைத்திலும் மீண்டும் பங்கெடுப்போம்;
இதே பள்ளியில் நாம் நட்ட செடிகள் மரங்களாக அதனடியில் மீண்டும் சாய்ந்திருப்போம்;
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் நின்றது துளி கண்ணீரோடு நாம் பிரிவோம்.
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் நின்றது துளி கண்ணீரோடு நாம் பிரிவோம்.
நட்பெனும் பயணம் பிரிவெனும் ஊரில் நின்றது துளி கண்ணீரோடு நாம் பிரிவோம்.

No comments:

Post a Comment