Monday, January 24, 2011

கடுவுளை நம்பினோர் கைவிடப்படார்


MyFreeCopyright.com Registered & Protected



                     பனி மூடிய நகர காற்றில் பூவொன்று மெல்ல திறக்க கீழ்வானில் வந்த ஒளியில் சில கிளியினங்களும் குயில் மைனாக்களும் மாறி மாறி வானில் வட்டமிட்டு பூபாளம் பாடிக்கொண்டு இருக்க, மெல்ல மெல்ல நாகரீக வளர்ச்சியில் இயந்திரமாகி போன நர மனிதர்கள் துயில் எழுந்தனர்., என் வீட்டு அலாரம் என் மனைவி விஷாலாக்ஷி; வழக்கம் போல் அலற தொடங்கினால்., என் தூக்கமும் கலைந்தது.,

" விடிஞ்சது தெரியாம தூங்குறேல், அப்புறம் எப்படி ஸ்ரீதேவி வீடு தேடி வருவா., மூதேவிதான் மங்களம் பாடின்றுபா., நீங்களும் இருந்த கிளார்க் வேலைய நியாயம் தர்மம்னு  விட்டுட்டுடேள்., இப்ப என்னையும் வேலைக்கு போக விடமாட்டேங்குறேள்., நீங்களும் சீக்கரமா ஒரு வேலைக்கு சேர மாட்டேங்குறேல்., வீட்ட எப்படிதான் நடத்தறது சொல்லுங்கோ, இப்ப அந்த தர்மமும் நியாயமுமா வந்து நமக்கு அன்னம் போடுது" என்று வழக்கம் போல இன்று அவளின் சுப்ரபாதத்தை ஆரம்பித்தால்., எழுந்ததும் காலை கடன்களை முடித்துவிட்டு வந்தமர்ந்து,  அவள் லொட்டென வைத்து சென்ற காப்பியை குடித்து கொண்டு, கையில் கிடைத்த ஒரு பழைய பேப்பரை புரட்டி கொண்டு இருந்தேன்., ஓடி வந்து மகள் மீனாக்ஷி " அப்பா அப்பா எனக்கு ஸ்கூல்ல பீஸ் கட்ட நாளைக்குதான் கடைசு நாள்பா, ரெண்டு நாளா பீஸ் கட்டளைன்னு வெளிய வெயில்ல முட்டி போட வைக்குறாப்பா, நாளைக்கு கட்டலைன்னா  ஸ்கூல  விட்டு வெளிய அனுப்சுருவேன்னு சொல்றாப்பா., படிக்கறதும் படிப்ப சொல்லி தர்றதும் ஞானத்த வளர்கறதும் தர்மம்னு  பாட்டி சொல்றாளேபா, ஆனா தர்மம் பண்றதக்கும் பணம் கேக்குறாலே அவுங்க பண்றது தப்புதானப்பா" என்று சந்தேக வயதில் வசித்து வரும் 12 வயது சிறுமி கேட்டாள்., அவள் கேட்டு கொண்டிருக்கும்போதே அவசர அவசரமாக ஓடி வந்து விசாலாக்ஷி மகளை பிடித்து " லேட் ஆயின்ட்ருக்கு இங்க என்னடி கதை அடிசின்றுக்காய்., நீங்களாவது அவளுக்கு ஷூ போட்டு விடக் கூடாதான்னா"., என்று கேட்டு மீனாட்சியை இழுத்து பள்ளியில் விட்டு வர விசாலாக்ஷி சென்றால்.,  வீடு மழை பொழிந்து ஓய்ந்தது போல் இருந்தது., யார் கேள்விகளுக்கும் என்னிடம் விடை இல்லை., நாட்டை சூதாட்டத்தில் துலைத்த அரசனை போல் மனம் வெம்பியது.,
               தர்மம் நியாயம் கட்டுப்பாடு என்று வளர்ந்தவன்., யார் வம்பு தும்புக்கும் நான் செல்வதில்லை., என்னை தேடி ஒரு வம்பு வந்தது. காஞ்சிபுரம் டி,இ,ஓ. ஆபீசில் கிளார்க் வேலை பார்த்து வந்தேன், ஒரு வருடத்திற்கு முன்பு என்னிடம் ட்ரான்ஸபர் கேட்டு ஒரு ஆசிரியர் வந்திருந்தார்., அலுவகத்தில் அனைவரும் லஞ்சம் வாங்கி கையொப்பம் இட., நான் மட்டும் இடமாட்டேன் என்றேன்., காரணம் லஞ்சம், என்னிடம் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கவேண்டுமென்று நினைப்பவர்க்கு நான் என்றும் உதவியதில்லை., பணிவாக கேட்டால் கண்டிப்பாக செய்வதுண்டு, அது தெரியாமல் வந்து என்னிடம் லஞ்சம் கொடுத்து என்னை விலைக்கு வாங்க பார்த்த அவனிடம் கொஞ்சம் சரமாரியாக திட்டி அனுப்பிவிட்டேன்., அதையே மனதில் வைத்து கொண்டு ஒரு வாரம் கழித்து எனக்கு கீழே வேலை பார்க்கும் ப்யூனை விலைக்கு வாங்கி என் டேபல் டிராவில் ஒரு பணக் கட்டை வைத்து., லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைத்து என்னை மாட்டி விட்டு குளிர் காய்ந்தான் அந்த ஆசிரியர்., உடன் வேலை பார்பவரும் அவர்களுக்கு எதிராக நான் வேலை பார்கிறேன் என்று எனக்கு எதிராக சாட்சி சொன்னார்கள்., நானும் சிறைவாசத்தை ஒரு வாரம் அனுபவித்தேன்., வேலை இழந்தேன்., மாமனார் வந்து பைலில் வெளியே எடுத்தார்., வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை., வீட்டிலும் மரியாதை கிடைக்கவில்லை., சமூகத்திலும் நற்பெயர் இல்லை., ஊமையாகிய வௌவாளை போல் திரிந்தேன்.,

         அந்த நேரத்தில்தான் என்னோடு பள்ளியில் படித்த ஒரு நண்பனின் அறிமுகம் கிடைத்தது., மாரியப்பன், சவுண்ட் எஞ்சிநீரிங் படித்தவன்., ஒரு தனியார் சானலில் ஒலிபதிவாளராக  வேலை பார்த்து வருகிறான்., அங்கு ஒளிபரப்பாகும் ஒரு இந்தி ஸீரியலில் நடிக்கும் சில நடிகர்களுக்கு நான் தமிழில் குரல் கொடுக்கவேண்டுமென்று சில வாய்ஸ் டெஸ்டுகள் செய்து., அதை அவன் மேனேஜரிடம் ஒலிபரப்பு செய்து., எப்படியோ அடித்து பிடித்து, எனக்கு தின கூலிப்போல் ஒரு வேலை வாங்கி கொடுத்தான்.,
                     பெரிதாக பணம் ஒன்றும் புழங்காது., அரைமணி நேரம் நான் ஒரு டப்பிங் செய்து கொடுத்தால் ஐநூறு ரூபாய் கிடைக்கும்., வரும் பணம் வீட்டு வாடகைக்கும் தினசரி வீட்டு செலவுகளுக்குமே போதுவதில்லை., வேறு வேலை கிடைக்கும் வரை இங்கு வேலை செய்வோம் என்று வேலை செய்கிறேன்., இரண்டு நாட்களாக வர சொல்லி எந்த ஒரு காலும் இல்லை., சரி நாமே சென்று பாப்போம் என முடிவெடுத்தேன், இன்று அந்த அரைமணி நேரம் கூட கிடைக்குமா என்று தெரியவில்லை., மீனாட்சிக்கு பள்ளி கட்டணம், கிட்டத்தட்ட 2500 ரூபாய், கட்ட வேண்டும்., வேறு வழியில்லை, போய் பார்ப்போம் என்று ஏதோ ஒரு மன தைர்யத்தை வளர்த்து கொண்டு விஷாலாக்ஷி வீடு திரும்பியதும் புறப்பட்டேன்.,
                                  " ஹல்லோ வாங்க ரமணி சார்., இன்னைக்கு உங்கள வர சொல்லி கால் பண்ணிருந்தாங்களா.,?? " என்று அவளின் ரெஜிச்டரை புரட்டிக்கொண்டே, கேட்டால் அங்கு அமர்ந்திருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் நிஷா, " இல்ல நானாதான் வந்தேன்., எதாச்சும் டப்பிங் இருக்குங்களா" என்று ஒரு கூச்சத்தோடு வற்றிய குரலில் கேட்டேன்., " இல்லைங்களே இப்போதைக்கு எதுவும் இல்லை, இருந்தால் கண்டிப்பாக நாங்களே கூப்டிருப்போமே," என்று புன்னகைத்துக் கொண்டே தயக்கத்தோடுக் கூறினால், " அப்படியா" என்று இரண்டு நிமிடம் யோசித்து விட்டு, "மாரியப்பன் இருக்காருங்களா கொஞ்சம் பேசணும்", (ஒரு வேலை இருந்தால் அவனிடம் கடனாகவாவது வாங்கிக்கொண்டு போவோம் என்று கேட்டேன்,) "ஒரு நிமிஷம் இருங்க பாக்குறேன்" என்று கூறி அவன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் செய்தால், "அவன் இருக்க வேண்டும் அவன் இருக்க வேண்டும் அவன் இருக்க வேண்டும் " என்று மனதில் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன்., "லக்ஷ்மி அங்க மாரியப்பன் இருக்காருங்களா, அப்படியா, எப்ப வருவார், சரி சரி, சரி நீ கீழ வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொல்லி காலை கட் செய்தால், புரிந்துவிட்டது இருப்பினும் எப்பொழுது திரும்புவான் என்று கேட்டு போகலாமென காத்திருந்தேன்," சார் அவர் இல்லைங்கலாம், ஷூட்டிங் விஷயமா ஆந்த்ரா போயிருகாராம், வர்றதுக்கு இன்னும் மூணு நாள் ஆகுமாம்" என்று கூறினால், " சரிமா ஏதாவது சான்ஸ் இருந்தா உடனே கொஞ்சம் கூப்டு, எங்க எப்ப இருந்தாலும் வர்றேன்" என்று கூறி மெல்ல அங்கிருந்து வெளியேறினேன், உலகமே புதிராக தெரிந்தது, உலகத்தில் கடந்து போகும் மனிதர்களின் கண்கள் மாற்றி மாற்றி என்னை மட்டுமே காண்பதாக தோன்றியது, யாரோ யாரிடமோ கேட்கும் கேள்விகள் என்னிடம் கேட்பதை போல் இருந்தது, யாரோ யாரையோ பார்த்து சிரிக்கும் சிரிப்பு என்னை இளக்காரமாக கிண்டலடிபதை போல் இருந்தது, மாறி காலத்தில் நரி ஓநாய் காக்காய் பிணந்தின்னி என்ற மிருகங்கள் சிங்கத்து குகை முன் நின்று குத்தாட்டம் அடிப்பதைப்போல், காட்டேரி பேய் பிசாசு ஆவிகள் சாத்தான்கள், ஆண்டவனின் ஆலயத்தின் முன் இறைவன் உறங்கும் நடு ராத்திரியில் பேயாட்டம் போடுவதைப்போல் ஒரு சூது கவ்விய உணர்வு என் மனதில்,   உத்தியோகம் புருஷ லக்ஷணம்  அது இல்லாத நான் ஆண் தானா ஒரு குடும்ப தலைவன் தானா, என்ற பல அற்ப கேள்விகள் எனக்குள், அருகில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தேன்.
அங்கு சென்று அந்த கல்லுக்குள் கல்லாகி அமர்ந்திருக்கும் கடவுளை கண்டு மனதில் இருப்பதை கொட்டி தீர்த்தேன், " நான் அப்படி என்ன பாவம் பண்ணினேன், வாழ்க்கைல உண்மையா நியாயமா வாழணும்னு நெனச்சது தப்பா நோக்கே என்ன தண்டிக்கறது பாவம்னு தோணலையா, தப்பு பண்ணிட்டு உன் உண்டியல்ல வந்து பணத்த போட்டு போறவாள எல்லாம் நன்னா வச்சுருக்க, கடுவுளே இல்லைங்கற கூட்டத்தையும் நன்னா வச்சுருக்க, என்ன மட்டும் ஏன் இப்படி சோதிக்கிற,நாளைக்கு  கேஸ் கோர்டுக்கு வர்றது., இன்னைக்கு  காலைல மீனாக்ஷி கேட்ட கேள்விக்கு என்னாண்ட பதில் இல்லை, உன்னாண்ட இருக்கோல்யோ , உன் சோதனைய உன் பக்தர்களோடு நிருத்திக்காமா அவங்கள சார்ந்திருக்கறவங்களையும் சோதிக்கிரியே இது நோக்கே பாவமா தெரியலையா, மனுஷாளா பொறந்துட்டா பொறுமை வேணும், ஆனா அந்த பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு,  இப்படி நீ சோதிச்சு சோதிச்சுத்தான், உலகத்துல பாதிபேர் அநியாயத்துக்கு தல வணங்கிட்ட, உன்ன கும்புட்றத நிறுத்திட்டா, சிலர் தற்கொலை கொலைன்னு எறங்கிட்டா, எனக்கு இன்னைக்குள்ள ஒரு வழிய நீ காட்டலைன்னா",என்று சில மணித்துளிகள் வாய்விட்டு அழுதுவிட்டு., என்ன பண்றது நேக்கும் தெரியல, பொறந்தப்பவே என் அப்பா அம்மா எல்லாத்தையும் பறிச்சுட்ட, உன்ன மட்டுமே வணங்கிண்டு வர்றேன், நீ மட்டும் தானே எனக்கு எல்லாமே, தயவு செஞ்சு உன் திருவிளையாடல நிறுத்திட்டு என்ன காப்பாத்து, உன் பிள்ளைய காப்பாத்து" என்று பலவாறு அழுது, அவன் பாதத்தில் சரணடைந்தேன்., மாலை வரை அருகில் இருந்த பார்க்கில் அமர்ந்து என் மொபைலில் உள்ள நண்பர்கள் நம்பர்களுக்கு கால் செய்து செய்து பாதி பேர் உதவ மறுத்தனர், பாதி பேர் என் காலுக்கு பதில் அளிக்கவே மறுத்தனர், திடீரென்று ஒரு கால், எடுத்து பார்த்தேன் விஷாலாக்ஷி " ஏன்னா எங்க இருக்கேள், இன்னைக்கு மீனாக்ஷியோட மிஸ்ஸ பாத்து பேசினேன், அவா நாளைக்குள்ள பணம் கட்டலன்னா ஸ்கூல்ல இருந்து நிருத்திருவேன்னு சொல்லிட்டா, பணமேதும் ரெடி ஆச்சா, இல்ல நான் வேணும்னா தோப்பனாராண்ட கேக்கவா.," என்று கேட்டாள் விசாலாக்ஷி, " இல்லடி ஒரு எடத்துல ரெடி பண்ணி இருக்கேன் நாளைக்கு காலைல கெடச்சுரும், நான் பாத்துக்குறேன்" என்று அப்பொழுதும் ஒரு வீராப்போடு பேசினேன்,
வெறும் கையோடு திரும்ப மனசில்லை, கையில் இருந்த 50 பைசாவிற்கு ஒரு சாக்லேட் வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கு வந்து மீனாட்சியிடம் அதை கொடுத்துவிட்டு, கோவிலில் கொடுத்த பூவையும் பொட்டையும் விஷாலாக்ஷியிடம் கொடுத்தேன், அவ்வளவுதான் முடிந்தது,  இன்று ஒரு நாள் கழிந்தது, என இரவு சாப்பிட்டு மகிழ்ச்சியெனும் விளக்கை அனைத்து தொல்வி எனும் பாயில் படுத்து நம்பிக்கையெனும் விழிமூடி உறங்கலானேன்.,
நள்ளிரவில் ஒரு கால், அந்த தொலைக்காட்சி நிறுவனத்து ரிசப்ஷனிஸ்ட் நம்பரிலிருந்து, " சார் நான் முருகன் பேசுறேன் அர்ஜண்டா உங்கள வரசொன்னாங்க,வர வேண்டிய ஹீரோவோட மேல் வாய்ஸ் இன்னைக்கு வரல, காலைல டெலிகாஸ்ட் பண்ணனும், ரெண்டு ஆங்கில படத்துக்கு டப்பிங் முடிச்சாகணும், உடனே வர சொன்னாங்க", என்றான், " இந்த வந்துட்டேன் ஒரு 20 நிமிஷத்துல அங்க இருப்பேன்" ., என்று சொல்லி விரைந்தேன்
இரண்டு படம் என்றால் குறைந்தது 1500-2000 ரூபாயாவது கிடைக்கும், இன்னொரு ஆயிரம் ரூபாய்க்கு கடைசியாக மிச்சமிருக்கும் வெள்ளி பூஜை சாமான்களை அடகு வைத்து மீனாட்சியின் கட்டணத்தை கட்டி விடலாம், என்று முடிவு கட்டி., உடனே விரைந்தேன்., இரவு முழுதும் வேலை பார்த்து காலை 8 மணிக்குள் இரண்டு படங்களுக்கு டப்பிங் கொடுத்து, 14 விளம்பரங்களுக்கும் டப்பிங் முடித்தேன், 3000 வாங்கிவிட்டேன்., இனி பூஜை சாமான்களை அடகு வைக்கவேண்டியதில்லை என்ற ஒரு தெம்போடு கிளம்பினேன்,  வெளியே போகும் போது., கடந்து போன எம்.டி திடீரெண்டு அழைத்து "ரொம்ப நன்றி கரக்டான நேரத்துக்கு வந்து ஹெல்ப் பண்ணீங்க., நீங்க வேலை தேடிகிட்டு இருக்கறதா கேள்வி பட்டேன், உங்களுக்கு ஆட்ச்யபனை இல்லைன்னா., எங்க சானல்ல ஒரு புது ப்ரோக்ராம் ஆரம்பிக்க போறோம்., 108 திவ்ய தேசங்கல்னு, வாரத்துக்கு ரெண்டு நாள்., அதுக்கு நீங்களே டைரெக்டராவும் ஆண்கராவும் இருந்துடுங்களேன்., மாசத்துக்கு 20,000 தர்றோம் அந்த ப்ரோக்ராமுக்கு அப்புறம் வேற ப்ரோக்ராமுக்கு உங்கள மாத்துறோம்., உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னா., நாளைக்கே நீங்க ஜாய்ன் பண்ணலாம்" என்றார்., பூவின் இதழ்களில் பனி படர்ந்தது போல் மனம் சிலிர்த்தது., உடனே ஒப்புக்கொண்டேன்., அன்று கோர்டில் ஆஜரானேன்., நான் நிரபராதி என்று நிரூபணம் ஆகி விடுதலை செய்யப்பட்டு ஏன் வேலை எனக்கு திரும்பவும் கிடைக்கப்பெற்றது., அரம்தனை சூது கவ்வும் மீண்டும் அறமே வெல்லும் என்பதும் நிரூபணம் ஆனது., ஆனால் மீண்டும் அந்த சேற்றில் சில செந்தாமரைகளோடு சேர்வதைவிட., இந்த பூந்தோட்டதிலேயே தங்கிவிட முடிவு செய்தேன்.,
என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை,
செய்நன்றி கொன்ற மகற்கு.,
என்று அந்த சானலிலேயே டைரக்டராய் மீண்டும் சேர்ந்தேன்.,
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்., என்னும் வாக்கியம் ஊர்ஜிதமானது., நானும் அன்றைய நாளே மீனாட்சியின் பள்ளி கட்டனத்தயும் கட்டினேன்., அடுத்த நாளே வேலைக்கு சேர்ந்தேன்., வாழ்க்கை நல்லபடியாய் அவன் இச்சைப்படி ஆரம்பித்தேன்., 

இப்படிக்கு,
ரமணி சௌந்தரராஜன்.

No comments:

Post a Comment