சிறகடித்து பறந்த ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
ஒரே நொடியில் நெருப்பில் பொசுங்கியது.,
அன்று பிறந்த வெள்ளை முயலொன்று
மதங்கொண்டு களிறின் காலடியில் நசுங்கியது,
சிதறு தேங்காயாய் உடைந்த என் நினைவுகளை
நிகழ் காலம் பொருக்கி கையில் தந்தது,
நீ எவனையோ மணந்திட என் காதல் இறந்திட
கண்ணீரில் கவிதைகள் மெல்ல மெல்ல மலர்ந்தது.,
No comments:
Post a Comment