என் பெயர் குரு, சிங்கார சென்னையை சேர்ந்தவன்., இப்போது பெங்களூருக்கு போய்கொண்டிருக்கிறேன், ஓசூரை கடக்கும் போதே நாசி வழி நுழைந்து உயிரை வருடி உள்ளே உறங்கி கிடந்த நினைவுகளை சீண்டி பார்த்தது பெங்களூரின் குளிர் காற்று., வானத்தில் திரை போட்டு அதில் மெல்ல படம் காட்ட ஆரம்பித்தது அந்த நாள் மேகங்கள்..
ஆறு வருடங்களுக்கு முன்பு;
அடித்து பிடித்து பிட் அடித்து பேப்பர் சேஸ் பண்ணி., கஷ்டபட்டு +2 பாஸ் செய்த சராசரி மாணவர்கள்ல நானும் ஒருவன்., நெட்டுகுப்பத்திலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும் எங்கு போனாலும் நண்பர்கள் பட்டாளம்., அப்பா பார்த்தார் இவன் இங்க இருந்தா உருப்பட மாட்டான்னு.., செல்ல பிள்ளை அதிலும் ஒத்த பிள்ளையான என்னை.., பெங்களூரில் இருக்கும் தன நண்பரின் கல்லூரியில் பி.ஸி.ஏ சேர்த்து ஒரு தனியார் மாணவர் விடுதியில் தள்ளி விட்டார்..,
கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.., நிறைய நண்பர்கள் எப்பொழுதும் விளையாட்டு, சினிமா, ஷாப்பிங், கிரிகெட், ஈவினிங் பார்ட்டீஸ் என புதிய பாதையில் மீண்டும் என் பழைய வாழ்க்கை சாயம் பூசி ஊருக்கேற்ப வண்ணம் மாறி கொண்டிருந்தது ..,
வழக்கம் போல கஷ்டப்பட்டு ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்த பெரு மூச்சில்.., இரண்டாம் ஆண்டுக்குள் நுழைந்தேன் ..,
முதல் நாள் முதல் பாடமே வி.பி.., வாத்தியார் வழக்கம் போல தாலாட்ட துவங்கினார்.., நானும் உறங்க தயாரானேன் .,
தூக்கம் சொக்கும் நேரத்தில்., மெய் சிலிமுதல் நாள் முதல் பாடமே வி.பி.., வாத்தியார் வழக்கம் போல தாலாட்ட துவங்கினார்.., நானும் உறங்க தயாரானேன் .,
அவள் என் இதய வாசலில் வந்து நின்று என்னை கேட்டது போல் இத்தனை ஜென்மங்களாய் பூட்டி கிடந்த பாசி படிந்த காதல் கதவுகள் அவளின் குரல் கேட்டு பூ பூத்தது என் உயிரென்னும் உலகத்தில் வெள்ளை பனி படர்ந்தது, இதயத்தை யாரோ மயிலிறகால் வருடியதைப்போல் கூசியது; வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தது., இப்படி ஆயிரம் ஆயிரம் உணர்வுகளோடு போரிட்டு கொண்டிருந்த மனதை தன்னிலைக்கு இழுத்து வந்தது அந்த இடைவேளை மணியோசை..,
அவள் வந்ததும் அறிமுகம் செய்து கொண்டது என் தோழி ஹெமாவோடுதான்.., அதனால் மெல்ல ஹேமாவிடம் போட்டு வாங்கினேன்.., அவளும் பட படவென அந்த பெண்ணின் முழு ஜாதகத்தையும் அள்ளி தெளித்தால்;
பெயர்: மது; ( மதுமிதா )
ஊர்: தஞ்சை;
தாய் மொழி:தமிழ்
தந்தைக்கு பேங்க்கில் வேலை; வேலையில் இடம் மாற்றத்தின் காரணமாக பெங்களூருக்கு வந்துள்ளதாகவும்; அவள் இப்போது பெற்றோருடன் வீட்டிலிருந்துதான் கல்லூரிக்கு வருவதாகவும் கூறி; " இவ்ளோ போதுமா இல்ல அவ அட்ரஸ், செல் நம்பர் இதெல்லாமும் வேணுமா"ன்னு கேட்டா.., அதற்கு நான் " இப்போதைக்கு இது போதும் வேற எதாச்சும் வேணுன்னா நானே கேக்குறேன்" என்றபடி நழுவ பார்த்தேன்.., அதற்குள் பிடித்து இழுத்து., " ஆமா நீ இதுவரைக்கும் எந்த பொண்ண பத்தியும் இப்படி விசாருச்சதில்லையே., என்ன மேட்டர்??" ன்னு குசும்போடு கேட்டாள் ஹேமா.., நானும் தெளியாத காதல் மயக்கத்தில் " இல்லப்பா என் வாழ்க்கை அகராதியில் மதுவெனும் வார்த்தையே இருக்கக்கூடாதென நினைத்தேன்.,
இப்படி மதுவே என் வாழ்க்கை ஆகுமென நினைக்கவில்லை"..,
என்று சொல்லிக்கொண்டே திரும்பும் போது பின்னாலேயே நின்றுகொண்டிருந்தாள் மது.., காதல் மயக்கம் அதிர்ச்சி ஆனது..,
உடனே ஹேமா " ஹே மது நான் சொன்ன குரு இவன்தான் நம்ம கேங் லீடர் நம்ம காலேஜ் கிரிகெட் டீம் கேப்டன்" என்று அறிமுக படுத்த அவளும் குறும்புத்தனமாக சிரித்துக் கொண்டே
"ஹாய்" என்று கை கொடுத்தால்., நானும் "ஹாய்" என்று சொல்ல முயன்று., காற்று மட்டுமே வர கை கொடுத்து அறிமுகம் செய்துக்கொண்டேன்" அவள் கை பிடித்து அக்கணமே ஒரு மோதிரம் போட்டு காதலை சொல்லிவிட தோன்றியது.., வேண்டாம் அவளுக்கு நம்மேல் காதலை வரவழைத்து பின் நம் காதலை சொல்லுவோம் என்று முடிவி செய்தேன்..,
நாட்கள் கடந்தது.., நெருக்கம் அதிகமானது.,
தினமும் ஒரே பேருந்து., கொண்டு வரும் லன்ச் பாக்ஸ் உணவை இரண்டு பேரும் பகிர்ந்து உண்பது .., ஒரே குடையில் இருவர் மழைக்கு ஒதுங்கி நிற்பது ; அவ்வப்போது பார்க், காஃபி ஷாப், ரெஸ்டாரன்ட், தேட்டர், கோவில் அவளின் அக்காவின் திருமணம், என் சென்னை புது வீட்டு க்ரஹப்ரவேசம், என இருவரும் பிரிவுக்கு இடம் கொடுக்காமல் இந்த உறவுக்கு பெயர் சூட்டாமல் இணைந்திருந்தோம்; இடைவெளி குறைந்து குடும்ப விஷயம், பிடித்தது, பிடிக்காததென்று.., எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம்., அவளை இம்ப்ரெஸ் செய்ய அவ்வப்போது சில மொக்கை கவிதைகள்; எஸ் எம் எஸ்; ஜோக்ஸ் என்று அவளிடம் தூவிப் பார்ப்பேன்.., நயமாக அவை நடுவில் என் காதலையும் சொல்வது ண்டு.., ஒரு நாள் நான் கல்லூரிக்கு வரவில்லை என்றால் " நேத்து ஏன்டா வரல " என்றபடி என் காதை செல்லமாக திருகுவாள், வலிக்காவிட்டாலும் வலிபதைப்போல் நடிப்பேன்., அவள் வரவில்லை என்றால் அன்று மாலையே அவள் வீட்டில் ஆஜராகி விடுவேன்,( காலையில் சென்றால் ஆன்ட்டி " ஏன்பா காலேஜ் போகல?" என்று கேட்பார்கள் அதனால் மாலை ); இப்படி நாட்கள் ஓட எங்கள் காதல் மரம் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி பூக்கள், பூத்து குலுங்க தொடங்கியது.., நண்பர்கள் எங்கள் நெருக்கத்தை காதல் என்று முடிவு கட்டி கல்லூரி முழுக்க அரங்கேற்றி விட்டனர்.., அவ்வப்போது " டேய் லவ்ஸ்தான???" என்று கேட்டு ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்., நாங்களும் " இல்லப்பா ஜஸ்ட் பிரெண்ட்ஸ்" என்றே சொல்லி நழுவிக்கொண்டிருந்தோம்.., இருவரும் எங்கள் காதலை வெளிபடுத்தாமலேயே.., கல்லூரி வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.., நண்பர்கள் எட்டு பேரும் ஒரு முறை ஔடிங் செல்வதாக முடிவெடுத்தோம்,
குடகு மலை(Coorg) கர்நாடகத்தின் ஊட்டி; அந்த குளிர் சேர்க்கும் இன்ப மலைச் சாரலில் என் காதலை சொல்லவேண்டும் என்று தீர்மானித்தேன்.., குடகுக்கு செ ன்றடைந்தோம்..,
குடகு மலை(Coorg) கர்நாடகத்தின் ஊட்டி; அந்த குளிர் சேர்க்கும் இன்ப மலைச் சாரலில் என் காதலை சொல்லவேண்டும் என்று தீர்மானித்தேன்.., குடகுக்கு செ
Hai Friends... The story was really touching... You can enjoy a lot in the second part of the story really... I enjoyed a lot and lot and lot...
ReplyDelete