Sunday, October 24, 2010

நினைவுகளே நிஜம் பகுதி - 2

MyFreeCopyright.com Registered & Protected



ஒரு ரெசோர்ட்டில் தங்கி ஊர் சுற்றி பார்த்து, போட்டிங், ராப்ளிங், ஃபையர் காமப்., என்று கொட்டம்  அடித்து கொண்டிருந்தோம்., நானும் நல்ல ஒரு சந்தர்பத்திற்காக காத்திருந்தேன்..,
ஒரு இரவு உடன் வந்தவர்கள் அனைவரும் நான்-வெஜ் என்பதால் ஒரு பக்கம் அமர்ந்து ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருன்தனர்; அவளோ  அய்யர் மாமி ப்யூர் வெஜ், அதனால் தனியாக அமர்ந்து ஏதோ பாட்டு கேட்டு கொண்டிருந்தாள், அவளை தனிமையில் விட மனமில்லாமல் சென்று அவளிடம் கடலை போடா ஆரம்பித்தேன்.., மெதுவாக அந்த இரு ஆண்டுகளில் கல்லூரியில் அரங்கேறிய காதல் கதைகளை அலஸ 
ஆரம்பித்தோம், தீடிரென இருள் சூழ்ந்தது,.., கரண்ட் கட்., ஸர்வர் கேன்டல்  கொண்டு வந்து வைத்தான்; அந்த மெழுகுவத்தி ஒளியில், என் இந்த மஞ்சள் மதியிடம் என் காதலை சொல்லியே தீரவேண்டுமென்று நினைத்தேன்.., எப்படி சொல்வதென்று தெரியவில்லை.., உலகித்திலே மிகப் பெரிய கனமான   ஒரே கணம் தன் காதலை காதலியிடம் சொல்வதுதான்.., அந்த தருணம் எதிரிக்கும் வரக்கூடாதென இன்றும் நினைக்கிறேன்..,


மெல்ல ஆரம்பித்தேன்;
"மது கொஞ்ச நாளாவே என் மனசு என் பேச்ச கேக்க மாட்டேன்னுது., கவிதை எழுதனும்னு நெனச்சா என் மனுசுல இருக்குற அந்த பொண்ணு பேர் மட்டும் தான் ஞாபகத்துக்கு வருது.., காதுல விழற சத்தமெல்லாமும் சங்கீதமா கேக்குது., யாராவது திட்டுனா கூட கோவமே வரமாட்டேன்குதுபா., கண்ண மூடி தூங்கற வரைக்கும் அவளோட நெனப்பு; கண்ண மூடுனா அவளோட கனவு.., நிலவு நீர் நதி வானம்னு செமையா பெனாத்துறேன்.., அவளுக்காக சமையலெல்லாம் கத்துக்குறேன்., அவளுக்காக நான்-வெஜ் ஒரே அடியா நிறுத்திட்டேன்., ஹாட்ரிக் சிக்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வர வர கிரிகெட்ல கலக்குறேன்.., அவ கூட இருந்த உலகமே என் பேச்ச கேட்டுதான் நடக்குற மாதிரி இருக்கு., ஃபிரண்ட்ஸ்  கூடவே இருந்தாலும் தனிமையில் இருக்குற ஒரு ஃபீல், கண்ணாடி முன்னாடி நின்னு நான் ஒருத்தனே சிரிக்கிறேன்.., ஏதாவது ரொமாண்டிக் லுக் வருதான்னு பாக்குறேன், இதெல்லாம் பரவாயில்ல ஒரு நாள் சூப்பர் மேன் மாதிரி பேன்ட்ட  போட்டு காலேஜுக்கு கெளம்ப இருந்தேன்., கோயிலுக்கு போய் கடவுள் கிட்ட நான் பாஸ்ஸாகுறேனோ இல்லையோ அவ பாஸ்ஸாகிடனும்னு வேண்டிக்குறேன்.,    ஏன் மது இதெல்லாம் காதலோட ஸிம்டோம்ஸா ? உனக்கு இந்த மாதிரி ஏதாவது நடந்திருக்கா????" என்று கேட்டேன்..,
வெட்கம் கலந்த குறும்போடு அவளும்;
" ஆமாம் காலையில எழுந்து  காபியில் சக்கரைக்கு பதிலா உப்பு போட்டு குடுச்சிருக்கேன், திடீர்ன்னு கிளாஸ்ல நான் ஒருத்தியே எதையோ நெனச்சு சிருச்சு அவனால நல்லா திட்டு வாங்கியிருக்கேன்.., அம்மா கூட கோயிலுக்கு போனப்போ அவன் நெனப்புல செருப்ப போட்டுகிட்டே உள்ள போயிட்டேன்; நானும் அவனுக்காக இப்பெல்லாம் நான்-வெஜ் சமைக்க ஆரம்பிச்சிருக்கேன்.., ஃபிரெண்ட்ஸ் கூட இருந்தா "கொஞ்ச நேரம் எங்கள தனியா விடுங்கலேன்"னு கத்த தோணுது, அவன் கூட வேற ஏதாவது பொண்ணு பேசினா உடனே எங்க இருந்து அந்த கோவம் வருதோ தெரியல அவன புடிச்சு நல்லா நாலு அடி போடாணும்னு  தோணும், அவன் மேல அவ்ளோ பொஸஸிவ்னஸ், காரணமே இல்லாம சிரிப்பேன்., பசிச்சாலும் சாப்ட முடியாம, படுத்தாலும் தூங்க முடியாம, அந்த கொடுமையான ராத்திரிய சகிச்சுகுட்டு இருப்பேன், லீவ் வந்தா எப்படா காலேஜ் தொரக்கும்னு இருக்கும், டி.வி ல கிரிகெட் மேட்ச் பாத்தா உடனே அவன் ஞாபகம் வந்துரும், வீட்ல ஏதாவது அவனுக்கு பிடிச்சத பண்ணா அத அவனுக்காக எடுதுகுட்டு வரணும் போல இருக்கும்.., காலைல வீட்டு வாசலுல கோலம் போடறப்போ மறந்து போய் அவன் பெயர் எழுதிடுவேன்.,
அவன் கூட இருக்குறப்போ சுத்தி இருக்கிறது எல்லாம் மறந்து போகும், இப்படி எக்கச்சக்கமா இருக்குப்பா...."என்றாள்,

உடனே நான் " சரி அந்த லக்கி பாய் யாரு??" என்று கேட்டதற்கு., " ஃபர்ஸ்ட் நீதான ஆரம்பிச்ச முதல்ல அந்த பொண்ணு யாருன்னு நீ சொல்லு அப்புறம் நா சொல்றேன்???" என்று ஒரு குறும்பு பார்வையோடு கேட்டாள்..,
"நம்ம தமிழ் பொண்ணுதான்., அவள உனக்கு கூட நல்லா தெரியும், கும்பகோணத்துல கோபால கிருஷ்ணன் பத்மாவதி தம்பதியருக்கு பொண்ணா எனக்காகவே..  02/03/1987 காலைல 6 .45 சூர்யோதயத்துக்கு முன்னாடி மார்கழி மாச முன்பனி மலர் போல மதுன்னு ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு.., அந்த மதுவத்தான்.., நான் லவ் பண்றேன்..,"என்று அவளை பற்றி சொல்ல சொல்ல அவள் முகத்தில் ததும்பிய வெட்கம் என் அகத்தில் தேன் சுரக்க வைத்தது..,சொல்லி முடித்தவுடன் இப்போ நீ சொல்லு " அந்த பையன் யாரு"ன்னு என்றேன்., ஒரே வார்த்தையில் "குரு" என்றால்..,
அவள் விரல்களை முதல் முறை காதலோடு பிடித்து " உன்ன என் உயிர் இருக்குற வரைக்கும் விடமாட்டேன் ஐ லவ் யு"னு சொல்லி உலகம் மறந்து அவளின் மோதிர விரலில் லேசாக  பூப்போல ஒரு முத்தம் வைத்தேன்..,
திடீரென கரண்ட்  வந்ததில் அவள் விரலில் நான் முத்தம் வைத்து கொண்டிருப்பதை நண்பர்கள் பார்த்துவிட; வெட்கத்தில் தாமரையாய் அவள் கன்னங்கள் சிவந்து; முகத்தை மூடிக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் .., எங்களின் நெருங்கிய பழக்கம் காதல்தான் என்று நண்பர்களுக்கு தெரியும், இன்று எங்கள் காதல் அப்பட்டமாக திரையிடபட்டுவிட்டது; எல்லாம் கலாய்க்க தொடங்கினார்கள்.., மெல்ல அங்கிருந்து நழுவி அவளை பின் தொடர்ந்தேன்..,


மொட்டை மாடியில் முழு வெண்ணிலவின் ஒளியில்; தென்னங்கீற்றின் நிழலில் மது நின்றிருந்தால்.., நின்றிருந்தால் என்று சொல்வதை விட..,
காத்திருந்தாள் என்பது தகும்., அருகில் சென்று" என்னபா கோவமா??" என்று கேட்டேன்.., "இல்ல பின்ன எல்லார் முன்னாடியுமா அப்படி பண்ணுவா".., கார்மேகம் போல காற்றோடு அவள் காதருகே கவிதை பாடிக் கொண்டிருந்த கூந்தலை ஒரு கையால்மெல்ல கோதிய படி..," என் கூட வாழ்க்க முழுசும் இதே போல  கை கோர்த்து வருவியா" ன்னு மறு கையால் அவள் கை பிடித்து கேட்டேன்..,என் கன்னங்களில்  அவள் இரு கைகள் வைத்து..," உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்.., உன்கூட வாழ்க்க முழுசா மட்டுமில்ல, வாழக்கைக்கு அப்புறமும்., உன் கூடவே வருவேன்"..,என்றாள்..,சொல்லி முடிக்கும் முன்பு அவள் பூவிதழில் என்னிதழ் புதைத்தேன்..., சில மணித்துளிகள் மௌனத்திற்கு பிறகு.., மெல்ல மெல்ல இருவரும் எங்கள் காதலை வெளிபடுத்திய பின்பு..,அவளிடம் கேட்டேன்.., "ஆமா என்ன நீ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்ச??
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா??" என்றேன்.., "இல்லை முதல் முறை பார்த்த போது உன் பேச்சும் செய்கையும் அதிலிருக்கும் ஸ்டைலும்  பிடித்தது.., பின் உன் கண்ணியம்.., கண்ணுக்கு கண் பார்த்து பேசும் தோரணை., இப்படி பல விஷயங்களை உன்னிடம் நேசிக்க ரசிக்க தொடங்கினேன்.., அந்த நேசம் நாளாக நாளாக உன் ஒவ்வொரு பார்வை வலையில் சிக்கி தவித்தது என்னிதயத்தில் காதலை விதைத்தது.., உன் கவிதை புத்தகத்தில் உயிர் வாழும் கவிதைகள்; அதை நான் திருடி வைத்துக்கொண்டு அதில் வளர்க்கும் மயிலிறகு, இப்படி அனைத்தும் என்நெஞ்சில் உன் மீது என் காதலை கொஞ்சம் கொஞ்சமாக நீரூற்றி வளர்த்தது.," என்றாள்., இப்படி பேசிக்கொண்டிருக்கையில் பேச்சின் நடுவில்" சரி எப்ப கல்யாணம் பண்ணலாம் " என்றேன்., அதற்கு.., " காதலுக்குதான் வயசு காலம் எதுவும் தேவையில்ல; கல்யாணத்துக்கு எல்லாமே தேவை.., முதல்ல நீ அடுத்து என்ன பண்ண போறன்னு சொல்லு.." என்றாள்.., " உனக்கே தெரியும் நம்ம படிப்பு எந்த அளவுக்குன்னு.., ஸோ ஒரு பிஸ்னஸ் பண்ணலாம்னு இருக்கேன்.., அப்பா பெரிய   தொழிலதிபர்., ஆனா அவரோட கம்பெனிய பாத்துக்குற அளவு நமக்கின்னும் பக்குவம் பத்தாது..,
 ஸோ கேரளாவுல எர்ணாகுளத்துல இருக்குற என் மாமா கூட அப்பாவோட காசுல 2 போட் ஹௌஸ் வாங்கி விடப்போறேன்.., என்னால் இந்த பிஸ்னஸ்ஸ நல்லபடியா நடத்த முடிஞ்சா அப்புறம் அப்பாவோட பிஸ்னஸ் என் கைல..," என்றேன்.., "ம்ம் ப்லான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..,ஆனா ஒரு கண்டிஷன்.., நீ எப்ப உன் பிஸ்னஸ்ல வெற்றி அடைஞ்சு உங்க அப்பாவோட பிஸ்நஸ்ஸ எடுத்து நடத்துற நம்பிக்க வருதோ அன்னைக்குதான் நம்ம கல்யாணம்" என்றாள் ..,
"தெரியாமத்தான் கேக்குறேன் அதென்ன இந்த பொண்ணுங்க எப்ப பாத்தாலும் ஒரு இன்ஷுரன்ஸ் கம்பெனில வர்ற விளம்பரம்  மாதிரி..,  கண்டீஷன்ஸ் அப்ளை, கண்டீஷன்ஸ் அப்ளை ங்கற மாதிரியே பேசுறீங்க..," என்றேன்.., " இல்லடா நானும் MCA பண்ணப்போறேன் IIT ரூர்கேல; ஸோ 3 வருஷம் திரும்ப இந்த பக்கமே வரமாட்டேன் அப்பப்போ நாம் எங்கயாவது சந்திப்போம், அதுக்குள்ள நீயும் ஒரு ஸ்டேடஸுக்கு வந்துரு எங்க அப்பா அம்மா கிட்ட நானே பேசுறேன், அதுக்கப்புறம் நம்ம கல்யாணம்., இதையெல்லாம் யோசிச்சிட்டு தான் அப்படி சொல்றோம்., பொண்ணுங்க என்னைக்குமே முன் ஜாக்ரதையா இருப்போம் தெரிஞ்சுக்கோ., ஆமா உங்க வீட்ல ஒத்துக்குவாங்க இல்ல" என்று ஒரு சந்தேகத்தோடு கேட்டால் "அதெல்லாம் கவலையே பாடாத சின்ன வயசுல இருந்தும் எங்க அப்பா நான் எது கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவாரு., அம்மா கொஞ்சம் கண்டிப்புதானாலும்  என் மேல ரொம்ப நம்பிக்க., நான் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியா இருக்கும்னு சொல்றவங்க ஸோ உன்னையும் அவங்க கண்டிப்பா வேண்டாம்னு சொல்மாட்டாங்க" என்று மாற்றி மாற்றி காதலர்களின் சலிக்காத உரையாடலை அன்று இரவு முதல் தொடங்கினோம்..,

" பெங்களூர் வந்தாச்சு எறங்குங்க எறங்குங்க" என்றார் கண்டக்டர்; ., பஸ் ஸ்டாண்டிலிருந்து கல்லூரிக்கு செல்லும் வழியில் என்னை கடந்து சென்றது ஆயிரம் நினைவுகள், அவளோடு நின்று கழித்து  களித்த பேருந்து நிழற்கூடம், காபி ஷாப், ரெஸ்டாரன்ட்., அந்த சாலை, கோவில் , எல்லாம் பாதி அப்படியே இருக்கிறது.., மீதி நகரத்தின் கால பரிணாம வளர்ச்சியில் முற்றிலும் காணாமல் போயிருந்தது.., மனிதன் தன் வசிதிக்காக சாலையோர மரங்களை வெட்டி இயற்கை அன்னையை  நிர்வான படுத்திவிட்டான்., இந்த பெங்களூர். .,  என்னை எனக்கு அடையாளம் காட்டிய ஊர்.., இன்று நான் என் தந்தையின் கம்பனிக்கு M.D. 2  போட் ஹௌஸ் வைத்திருந்தவன் இன்று 8 போட் ஹௌஸுக்கு ஓனர், வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில்.., அவளோடு காதல் இன்னும் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கிறது.., அவ்வப்போது ஃபோனில் அரட்டை, இ-மைல்ஸ், வீடியோ சாட்; அவ்வப்போது மாதம் ஒரு முறை சந்திப்பு என்று எங்களின் காதல் நிறைகுடமாய் நடுக்கடலாய் அமைதியாய் அசைந்தாடி கொண்டிருந்தது..,


இருவர் வீட்டிலும் பேசி அவளுக்கே தெரியாமல் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டேன் , அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்., 6 மாதத்தில் கல்யாணம்.,  இந்த இனிய செய்தியை சொல்லும்போது அவள் விழியில் சிறு பிள்ளையாய் குதித்தாடும் ஆனந்தத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்..,
கல்லூரி வாசலை வந்தடைந்தேன்.., வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கெட் டுகெதர் பார்ட்டி..,வேலை காரணமாக மூன்று ஆண்டுகளாய் வர இயலவில்லை., இன்று நண்பர்கள் பட்டாளம் எனக்கு முன் வந்து காத்திருந்தனர்.., அனைவரும் கை குலுக்கி கட்டி அணைத்து.., எங்கள் இத்தனை வருட பிரிவை தூளாக்கிக் கொண்டிருந்தோம்..,



No comments:

Post a Comment