Sunday, October 24, 2010

நினைவுகளே நிஜம் பகுதி - 3

MyFreeCopyright.com Registered & Protected






நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது.,ஒரு கால் சந்தேகமே இல்லை அவளே தான்..,என் தேவதை " குரு நான் எந்த கலர்  டிரஸ் போடட்டும்., வைட்டா இல்ல ப்ளாக்கா?" என்றாள்? " வைட் கலர் சுடில வா., உன்ன முதல் முதல் நான் அந்த ட்ரஸ்ல தான் பாத்தேன்.., இன்னைக்கு உனக்கொரு ஸர்ப்ரைஸ்  வச்சிருக்கேன் ஸீக்ரம் வா"  என்றேன்.." இந்தா கெளம்பிட்டேன் கெளம்பிட்டேன்" என்ற படி பர பரப்பாக போனை கட் செய்தால்.., சில மணிநேரங்கள் ஓடியது.., வெறும் முட்பது நிமிடம் ஆகக்கூடும் அவள் அக்கா வீட்டிலுருந்து காலேஜுக்கு., ஏன் இன்னும் வரவில்லை என்று மனம் பதறியது.., நானும் என் நண்பர்களும் மாற்றி மாற்றி அவள் மொபைலுக்கு முயற்சு செய்து கொண்டே இருந்தோம்., அவள் ஏனோ பதில் அளிக்கவே இல்லை.., தான் கிளம்பிவிட்டதாக சொல்லி 4 மணி நேரம் ஆகிவிட்டது.., அவள் அக்கா வீட்டில் யாருமில்லாததால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..,
மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வோமென கால் செய்தேன்., அவள் போன் வழக்கம் போல் அடிக்க துவங்கியது.." ஹலோ" என்றது ஒரு கரக்கரத்த குரல்.., " மது இல்லையா" என்று கேட்டேன் "நீங்கள் யார்" என்று கன்னடத்தில் கணீரென கேட்டது அக்குரல்; "நான் குரு அவளோட பிரெண்ட் நீங்க யாரு மதுவோட போன் உங்க கைல எப்படி வந்துச்சு" என்ற கேட்டபடி கன்னடத்திலே தொடர்ந்தது உரையாடல்.., "நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸவப்பா, உன்னோட பிரெண்டுக்கு  இங்க ஆக்ஸிடன்ட்டு ஸ்பர்ஷ் ஹாஸ்பிடல்ல  அட்மிட் பண்ணிருக்கு உடனே வா" என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்., என்ன செய்வது புரியவில்லை.., திடீரென யாரோ என் மது போனில் அவளுக்கு ஆகஸிடென்ட் என்று சொல்கிறான்  .,  இது நிஜமா., இல்லை பிரெண்ட்ஸ் யாருவது விளையாடி பார்கிறார்களா..,புரியவில்லை., என் பிரெண்ட் நம்பரிலிருந்து கால் செய்து பார்த்தான்.., அதே பதில்... அவர் சொன்னபடி ஸ்பர்ஷ் மருத்துவமனைக்கு அழைத்து விசாரித்தோம், தகவல் உண்மை என்று ஊர்ஜிதம் ஆனது..,  உடனே நாங்கள் ஏழு பேரும்  கிளம்பினோம்., பதட்டத்தில் நண்பர்களை முந்திக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றடைந்தேன்., 





 எமர்ஜன்சி வார்ட் அருகே இன்ஸ்பெக்டர் நர்சிடம் எதையோ விசாரித்து கொண்டிருந்தார்., அருகில் சென்று நர்ஸிடம்.., " என்ன ஆச்சு?? எதுவும் அடி படலையே சும்மா சுளுக்கு ச்ப்ரைன் அவ்ளோதான?? அவ வலி தாங்க மாட்டா எங்க உள்ள இருக்காளா நான் போய் பாக்கலாமா?? என்று செய்வதறியாது பிதற்றினேன்..., நர்ஸ்ஸும் போலீஸும் ஒருவரை ஒருவர் பார்த்து, "நீங்க யாரு??  உங்களுக்கு யாரு வேணும்?? யாரோட அட்டண்டர் நீங்க" என்று கேட்டனர்., "நான் நான் குரு அவளை நான் மதுவை அவளை" என்று சொல்லும் போதே பல வருடங்கள் எங்கேயோ தூங்கிக்கொண்டிருந்த என் கண்ணீர் துளிகள் கண்களை கசக்கி சிவக்க விட்டு வெடித்து வெளியேறியது.., " அவங்க புருஷனா" என்று கேட்டார் போலிஸ் இன்ஸ்பெக்டர்..,அதற்குள் ஓடி வந்து நண்பர்கள்.., விஷயத்தை எடுத்து சொல்ல.," தொண்டையை கவ்வி கொண்டிருந்த துக்கத்திற்கு மேலும் வலுக் கூட்டினார் நர்ஸ்., "ஐ எம் ஸாரி விபத்து நடந்த இடத்துலேயே அவங்க உயிர் போயிருச்சு., ஸ்பாட் அவுட்., லாரி மேல ஏறுனதுல அவங்க அங்கேயே இறந்துட்டாங்க, இப்போ மார்சுரில இருக்காங்க வாங்க இந்த பக்கம்., " என்றபடி எங்களை பிணவறைக்கு அழைத்துச்சென்றார்.., " இல்லை இல்லை அவள் என் மது கிடையாது அவள் என் மதுவாக இருக்காக் கூடாது" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே போனேன்., ஒரு ஐஸ் பெட்டியிலிருந்து அவளை வெளியில் எடுத்து ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து மேல் மூடப்பட்டிருந்த வெள்ளை போர்வையை சற்று விளக்கினர்,  பார்த்தவுடன் இதயம் சுக்கு நூறாகி போனது, அவள்தான் என்னவள்தான், என் மது தான்.., காய்ந்து போன உதிரத்தின் சாயம் அவள் முகத்தை மறைத்த நிலையில், முதல் முறை நான் பார்த்து ரசித்த அதே வெள்ளை சுடிதார் கிழிந்த நிலையில், அதே மெழுகு உடல் நசுங்கிய நிலையில், அதே மான்விழிகள் பிதுங்கிய நிலையில்., நான் மெட்டி போட்டு மருதாணி இட்டு முத்தமிட துடித்த அவள் கால் விரல்கள் சிதைந்த நிலையில்., காற்று நுழைந்து வாசமாக வெளிவர தவம் கிடந்த அவள் நாசி இன்று நசிந்த நிலையில் கிடந்தன., அவளை மடியில் ஏந்த முடியாமல் மெல்ல துக்கம் கவ்விய தொண்டையை உடைக்க முற்பட்டு அதுவும் முடியாமல் எரிமலை குமருவதாய் "போகாதடி செல்லம்,  நீ இன்னமும் என்னோட என்கூடதான் இருக்க., நமக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தம், 6 மாசத்ல   கல்யாணம், நம்ம அப்பா அம்மா எல்லாம் ஒத்துகிட்டாங்க, இத சொல்லதான்டி ஓடி ஓடி வந்தேன்,  மாலை மாத்தி மெட்டி பொட்டு தாலி கட்டி அம்மி மிதிச்சு அருந்ததி பாத்து நம்ம வாழ்கைய ஆரம்பிக்கனும்னு சொன்னயே மது., இப்படி என்ன விட்டுட்டு வழி தெரியாத ஊருக்கு நீ மட்டும் தனியா கிளம்பிட்டியே, வந்துருடி என் கிட்ட திரும்பி வந்துரு  உன்ன விட்டா எனக்கு வேற யார் இருக்கா?? உலகமே இருட்டி போகுதுடி இத பார் இங்க பார் ஹேமா, வர்ஷா, கார்த்திக் எல்லாம் உன்ன பாக்கதான் வந்திருக்காங்க., நர்ஸ்ஸு நீ இறந்துட்டதா சொல்றாங்க இல்லன்னு எந்திருச்சு சொல்லுடா " என்று கதற.., நண்பர்கள் சமாதானபடுத்தி அவளை அழைத்து இல்லை அவள் உடலை எடுத்து அவள் அக்கா வீட்டிற்க்கு சென்றோம்; இரவு முழுதும் அவள் காலருகே அமர்ந்திருந்தேன் அமைதியாக அடிநெஞ்சில் கனவுகளுக்கு கொள்ளிவைத்தபடி., அடுத்த நாள் காலை என் அப்பா அம்மாவும் அவள் அப்பா அம்மா வந்திறங்கினர்; அவளை பார்த்து அத்தையும் மாமாவும் அழுததில் என்னிதயம் பல ஈட்டிகளை தாங்கி போர் செய்து கொண்டிருக்கும் பிளிரியை போல் அலறியது..,
நெருப்பில் எண்ணை ஊற்றி  என் காதல் பூ உள்ளே இறங்கி எரிந்து கருக தொடங்கியது.., அம்மாவின் மடியில் கொஞ்ச நேரம் தலை சாய்த்து அழுது தீர்த்தேன்.., சொந்தங்களின் ஆறுதல் நண்பர்களின் அக்கறை., எல்லாம் என்காதுகளில் மெல்ல மெல்ல நுழைய மறுத்தது., நேரம் கடத்தாமல் கொண்டு செல்வோம்.., என்றது ஒரு குரல்.., "ஐயா பாட காட்டியாச்சு" என்றது மறு குரல்., "என்ன ஆச்சு எப்படி ஆச்சு" என்று கேட்டுக் கேட்டு புண்ணில் முல் தைத்தது இன்னொரு குரல், எல்லோரும் திடீரென்று அவளை தூக்கி கொண்டு அவர்கள் முறைப்படி கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி கொண்டே கிளம்பிச் சென்றனர்.., நானும் பின் தொடர்ந்தேன்.., நண்பர்கள் பெற்றோர் யார் சொல்லியும் நிற்கவில்லை., மின்சார தகனத்தில் அவள் எரிய துவங்கினால்; அவள் கால் நகத்தில் மருதாணி காயவில்லை; கண்ணில் வைத்த கருமை ஆறவில்லை; அதற்குள் நரம்புடல் நசுகி உயிர், காற்று வெளியில் கலந்து விட்டதே.., மெதுவாய் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து அவளையே நினைத்து நடக்க ஆரம்பித்தேன்..,


எங்கே அவளது உயிர்.., எங்கே அவளது கனவுகள்.., எங்கே அவள் பேசிய வார்த்தைகள்; எங்கே அவள் பார்த்த பார்வைகள்; மண்ணோடும் விண்ணோடும்; நதியோடும் மதியோடும்; பிறையோடும் கரையோடும்; இறகோடும் இரவோடும்; முகிலோடும் பகலோடும்; கடலோடும் காற்றோடும் கலந்து விட்ட யாதுமாகி நின்றுவிட்ட அவள் என் கண்முன்னே இல்லை; அவள் பிம்பம் மட்டுமே கானலாய் நிற்கிறது.., கனலாய் என்னை சுட்டு எரிக்கிறது..,நினைவுகளின் பெயரில்.., உயிர் வேரினில் தீயிட்டு உண்மை உணரும் வரை வதைத்து வாட்டி எடுக்கும் வேதனையின் மறு பெயர் காதல்.., அவள் பிரிவு, தாங்க முடியாத வலி.., சொல்ல முடியாத சோகம்.., ஆனால் உண்மையில் அவள் எங்கே?? உடலை பிரிந்த உயிர் எங்கே போனது?? நினைவுகளாய் உரு மாற்றம் கொண்டு என்னோடு வாழ்கிறதா?? அவளை நான் காதலித்தேன், அவள் உடலை அல்ல., இறந்து அவளை அவளுயிரை சேர்ந்திடவா., இன்னொரு கேள்வி, இறந்தால் அவளை சேர்வேனா?? கண்முன்னே நடமாடும் உடல் காணாமல் போகுது., அந்த உடல் பழுதாகும் வரை இருக்கும் உயிரும் திடீரென்று மாயமாகுது., இதன் நடுவில் தற்கொலை முட்டாள்தனம் என தோன்றியது, நினைவுகளே நிஜம் என்று விளங்கியது. எங்களின் நினைவுகளை, அதை அநாதியாக்க மனம் வர வில்லை., என் பெற்றோர், விவரம் தெரிந்ததிலிருந்து நான் கேட்டதை மறுக்காமல் இது வேண்டும் அது வேண்டுமென்று என்னை கடவுளிடம் கேட்க விடாமல் வளர்த்த அவர்களையும் அநாதியாக்க மனம் வரவில்லை.., அத்தை மாமா அவர்களுக்கு  மருமகனாகும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போயினும்; மது அவர்களுக்கு செய்ய நினைத்தவற்றை இனி அவளிடத்தில் இருந்து நான் செய்ய நினைத்தேன்.., தொலை தூரம் வந்து விட்டேன்., அவர்கள் உயிரோடு இருக்கும் வரை இருப்போம்.., அல்லது எனக்கு அழைப்பு வரும் வரை அவள் நினைவுகளோடு இருப்போம்.., அந்த காலதேவனின் கருப்பு கப்பல் கரை தட்டும் வரை., காத்திருப்போம்.., வாழ்க்கை பின்னால் என்ன நடக்குமோ., வாழும் வரை அவள் நினைவோடு இருப்போம்..,
அவள் நினைவோடு இருப்போம்.,.
அவள் நினைவோடு இருப்போம்..,

No comments:

Post a Comment