Tuesday, October 5, 2010

நட்பென்றும் மூப்படைவதில்லை





நட்பெனும் நீலவானில் கார்முகில்களாய் நாமிணைந்தோம் ,


இடி மழை மின்னலென உணர்சிகளில் துள்ளி குதித்தோம்,


கோடி நினைவெனும் முத்துக்களை ஆழியிதயங்களில் விதைத்திட்டோம்,


காலமெனும் காற்றடிக்க  கண்கலங்க கைகுலுக்கி  பிரிகின்றோம்,


 
தோழா-


 
மீண்டும் ஒருநாள் வாழ்வில் சந்திப்போமா தெரியவில்லை,



காரணம் மரணநாள் அறிந்து பிறந்தவன் எவனுமில்லை,



சந்தித்தாலும் மூப்புற்ற வெண்மேகமாயிருக்கலாம்  கவலையில்லை,



புலன்கள் செயலிழப்பினும்  நம்முயிரொத்த நட்பென்றும் மூப்படைவதில்லை..,

No comments:

Post a Comment