Sunday, November 28, 2010

என்னவள்

MyFreeCopyright.com Registered & Protected






தொடு வானத்தை பார்த்து அது சிவக்கும் அழகை ரசித்து கொண்டிருக்கிறேன்., மேற்கு திசையில் அந்த அரபிக்கடல்  தீண்டும் மங்களூர் கடற்கரையில் வேரூன்றி வளர்ந்து அந்த சூரியனை பார்த்து தலை குனிந்தவாறு நிற்கும் தென்னை மரத்தின் நிழலில் நான் அமர்ந்திருக்க., அந்த மஞ்சள் மாலை முகிலினங்கள் என்னை என் நாட்களுக்கு  அழைத்து செல்லும் உணர்வு., வீசிக்கொண்டிருந்த  கடற்கரை குளிர் காற்றில்., மெல்ல நானும் பயணித்தேன்.,





ஆறு மாதங்களுக்கு முன்பு., பெங்களூரில் ஒரு பிரைவட் அட்வேர்டைஸ்மன்ட் கம்பெனியில் பணி புரிந்து வந்தேன்.,மதியம் சுமார் மூன்று மணி இருக்கும்., வீட்டிலிருந்து ஒரு கால்., " சன்ஜய் இன்னும் இரண்டு நாட்களுக்கு லீவ் போட்டுரு., நம்ம மங்களூருக்கு உனக்கு பொண்ணு பாக்க போறோம்.," என்று அன்னை ஆணையிட., நானும் எம்ப்டி மண்டை எம்.டி இடம் பேசி சமாளித்து இரண்டுக்கு மூன்று நாளாய் லீவ் போட்டு., அன்று இரவே நாங்கள் அப்பா அம்மா தம்பி தாத்தா பாட்டி என அனைவரும் மங்களூருக்கு கிளம்பினோம்., இதற்க்கு முன்பு காதலில் நான் விழுந்ததில்லை.,பெரிதாக நம்பிக்கையும் இல்லை., சில பெண்களோடு பழகும் போதும்., சில பெண்களை பார்க்கும் போதும்., நாம் கல்யாணம் செய்யும் பெண்ணுக்கு இப்படி ஒரு குணம் இருக்க வேண்டும்., இப்படி ஒரு ஸ்டைல் இருக்க வேண்டும்., இப்படிதான் பார்க்க வேண்டும்., இவ்வளவுதான் சிரிக்க வேண்டும்.,என்றெல்லாம் நினைப்பதுண்டு என்னவளை எனக்குள்ளே தினமும் சிறுக சிறுக கற்பனையில் வடிப்பதுண்டு.,

முதல் முறை பெண் பார்க்க செல்கிறேன்., செல்லும் வழியெல்லாம் என்னை எல்லோருமாக சேர்ந்து செம்மையாக கலாய்த்துக் கொண்டிருந்தனர்.,  காரணம் உலகித்திலே அதிலும் இந்த காலத்திலே பெண்ணின் முகம் பார்க்காமல்., பெண் பார்க்க செல்லும் முதல் மாப்பிள்ளை நான்தான்., என் வீட்டில் அப்பா அம்மா என்று வந்தவர்களோடு சேர்த்து வராதவர்களும் அவள் புகைப்படத்தை பார்த்துவிட எனக்கு மட்டும் யாரும் காட்டவில்லை., கேட்டாள் ஸர்ப்ரைஸாமா., இப்படி ஒரு கொடுமை., ஆனால் இதிலும் ஒரு அழகான சுகம், பனி மூடிய நடு நிசியில் வீசும் மல்லிகை வாசமாய் மனதில் ஏதோ ஒரு சிலிர்ப்பு., போகும் வழி ஒரு அழகான நெடுஞ்சாலை., வெறும் 347 கிலோமீட்டர்கள்தான் ஆனால் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு யுகம் கடந்து போவதாய் தோன்றியது., அங்கு சென்று என்ன பேச போகிறேன் அவள் என்ன கேட்பாள்., எப்படி அவளிடம் பேச்சை தொடங்குவது., அவள் மொபைல் நம்பர் வாங்க வேண்டுமே., எப்படி., என்று., ஆயிரம் கனவுகளோடும் சில கற்பனைகளோடும் மங்களூர் சென்று இறங்கினேன்., அத்தை வீட்டில் ராத்திரி தங்கி இருந்து.,அடுத்த நாள் காலை அவர்கள் வீட்டிற்கு சென்றோம்., மங்களகரமான வீடு., சும்மா சொல்லக்கூடாது பலமான வரவேற்புதான்., ஆனால் ரொம்ப நேரம் பெரியவர்கள் அவர்கள் வழக்க படி தங்கள் தங்கள் மூதாதையோர் பெருமைகளை பேசிக் கொண்டு காலத்தை கடத்தி கொண்டிருந்தனர்., அருகில் இருந்த தம்பியிடம் " டேய் போடோவும் காட்டாம., இங்க வந்தா சீக்ரமும் வரசொல்லாம எண்டா இப்படி படுத்துறீங்க., பொண்ண வர சொல்றா" என்றேன்., தம்பியும் உடனே " சரி சரி நம்மலே பேசிகிட்டிருந்தா எப்படி., பொண்ண வரசொல்லுங்க., அண்ணாத்த காத்துக்கிட்டு இருக்காருல்ல., இது எப்படி" என்றான்., எல்லோரும் சிரித்து விட்டு., " ஏம்மா நிஷாவ வரசொல்லு" என்றார் மாமனார்., எந்த பக்கத்திலிருந்து வரப்போகிறாள் என்று தெரியாமல் நான் கண்களை மட்டும் உருட்டி கொண்டிருக்க.,






 என்கண்களுக்கு அகப்பட்டது மிதந்து வரும் ஒரு அழகு தேவதை, வெள்ளை நிற  சேலையில் கையில் காபி தட்டை ஏந்தி தலை குனிந்து வெட்கத்தின் நிழலில் மெல்ல மெல்ல மிதந்து வந்தால்., குளிரான காற்றடிக்க., சுற்றி இருப்பவர் எல்லாம் திடீரென காற்றோடு கரைந்து போக., அவள் மட்டும் என்னை தேடி வர., ஆழி நடுவில் அழகிய தீவில் முழு மதியின் ஒளியில் தனிமை சூழ்ந்த இரவில் பனி சாரல் மழையில் நானும் அவளும் மட்டும் இருப்பதாய் தோன்றியது., தம்பி நான் கண் சிமிட்டாமல் பார்த்ததை கவனித்து மற்றவர்கள் பார்க்கும் முன்பு., என் தோளை தட்டி திரும்ப இந்த உலகிற்கு அழைத்து வந்தான்., அவள் அருகில் வந்து காபியை தரும் போது., அதுதாம்மா மாப்பிளை நல்ல பாத்துக்கோ என்று அம்மா சொல்ல., அவள் கருவிழியை மெதுவாய் ஒரு வினாடியில் அங்கும் இங்குமாய் ஊஞ்சலாட்டி ஒரு கூரான காதல் பார்வை பார்த்து குட்டியாய் ஒரு புன்னகை செய்து விட்டு போனால்., இதயத்தில் பல நட்சத்திரம் மின்ன., ஒரே நொடியில் ஆயிரம் மின்னல் வீச, ஒரு கவிதை போல இனி இவள் தான் என்னவள் என்று உயிர் கோடி பூ பூத்து என்னை கேட்காமலே முடிவு செய்தது., அம்மா அவளை பாட சொல்லி கேட்க., மெழுகாய் உயிர் கரைவதை போல் அவளின் அழகான குழல் குரலில் பாரதியின் " காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் " என்று என்நெஞ்சில் அமுதூற்ற பாடி முடித்தாள்.

பின் சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் முடித்து கொண்டு., மெல்ல அம்மாவிடம் பேசி அவள் வீட்டாரிடம் அவளுடன் சில நாழிகை பேசி களிக்க அனுமதி வாங்கச்சொல்லி., அவர்களும் அனுப்பி வைக்க., அவள் வீட்டிலிருந்து கடற்கரை மிக அருகில் என்பதால்., இருவருமாய் கடற்கரைக்கு சென்றோம். இருபுறமும் கீழ் வானம் வரை யாரும் இல்லை.,

எத்தனையோ பெண்களுடன் பேசி பழகி இருந்தாலும்., இப்படி ஒரு பெண்ணிடம் இப்படி ஒரு சந்தர்பத்தில் சூழலில் பேசுவது இதுவே முதல் முறை., காரில் வரும் போது ஏதேதோ நினைத்து யோசித்து ப்லாநெல்லாம் பொட்டு வந்தேன்., எக்ஸாம் ஹாலில் மாணவன் போல இங்கு வந்த உடன் எல்லாம் மறந்து போனது., இருவரும் அமைதியாகவே நிற்க கடற்கரை காற்று மட்டும் எங்கள் காதுகளில் கவிதை பாடி கொண்டிருக்க., சரி நாமே முதலில் ஆரம்பிப்போம்., என்று.,


சன்ஜய்:
ஹாய் நிஷா.,  உண்மைய சொல்லனும்ன உன் போடவா கூட நான் பாக்கல, எங்க வீட்லயும் காட்டல., நான் நெனச்சிருந்தா பாத்துருக்கலாம்., ஆனா காத்திருந்து உன்ன நேர்ல பாத்து எனக்குள்ள நடந்த இந்த புது அழகான மாஜிக் நடந்திருக்காது., வீட்ல அவங்க காட்டாம இருந்ததும் நல்லதுதான்., இங்க வர்றதுக்கு முன்னாடி.,என்ன பேசணும் எப்படி பேசணும்னு ஏதேதோ ப்ளாநேல்லாம் போட்டு வந்தேன் ., இங்க வந்து எல்லாமே மறந்துருச்சு., எனக்கு உன்ன.., உன்ன  ரொம்ப பிடிச்சிருக்கு., உனக்கு என்ன ... பிடிச்சிருக்கா??.,

நிஷா:
பிடிச்சிருக்கு.,


சன்ஜய்:
அவ்ளோதானா., மணிரத்னம் சார் ரசிகையா., ஒரே வார்த்தைல முடுச்சிட்ட.,
 நீ மெட்ராஸ் ஐ.ஐ.டி ல படிச்சதா கேள்வி பட்டேன்., ஏதும் அப்ராட் வாய்புகள் வரலையா??

நிஷா:
வந்தது ஆனா இப்போ பெங்களூருக்கு போகணும் இல்லையா., அதனால அப்ராட் போகல.,

சன்ஜய்:
ஐ ப்ராமிஸ் யு., உனக்காக பெங்களூர்ல ஒரு அழகான குடும்பம் காத்துட்ருக்கு., அதவிட உனக்காகவே பிறந்தவன் 25 வருஷமா காத்துக்குட்ருக்கான்., யு ஹாவ் அ ப்ளசன்ட் மொமென்ட்ஸ் வைடிங்.,







நிஷா:
அப்படியா??., உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்., நான் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகலாமா?

சன்ஜய்:
உன் இஷ்டம்., உன் திறமைகள் நீ கற்ற கல்வி வீனாககூடாதுன்னு நெனச்சா போகலாம்., இல்ல பரவில்லை நான் ஹோம் மேகராவே வீட்ல இருந்து குழந்தைகளையும் எல்லாரையும் பாத்துப்பேன்னா ஒகே., படிப்பும் வேலை எல்லாமே உன் இஷ்டம்., நான் எதுக்கும் குறுக்க நிக்கமாட்டேன்., உங்க வீட்ல நீ எப்படி முடிவெடுக்குறியோ அதே போலதான் அங்கயும்., நீ இஷ்ட பட்டத பண்றதுக்கு உனக்கு முழு சுதந்திரம் உண்டு., என் பர்மிஷன்காக எல்லாம் காத்திருக்க வேண்டாம்., எனக்காக எதையும் மாத்திக்கவும் வேண்டாம்., வேற ஏதாவது கேள்விகள் இருக்கா??

என்று இருவரும் மாறி மாறி கேள்விகளை கேட்டு ஓரளவுக்கு இருவர் நடுவில் சில பரஸ்பர எண்ணங்கள் இருப்பதை உணர்ந்தோம்., அரை மணி நேரம் பேசி கழித்து., சில மணித்துளிகள் மௌனத்திற்கு பிறகு.,


நிஷா:
எனி வே லேட்டாயிருச்சு வீட்டுக்கு போலாமா?? என்றால்.,

சன்ஜய்:
கண்டிப்பா., ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்னு தெரிஞ்சுக்கணும்.,

நிஷா:
என்ன??

சன்ஜய்:
உன் மொபைல் நம்பர்.,

மீண்டும் மத்தாப்பை போல் குட்டியாய் சிரித்து.,
நிஷா:
உங்க மொபைல கொடுங்க.,






என்றபடி என்னிடமிருந்து மொபைல் வாங்கி அவள் நம்பருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு., எங்கள் கல்லூரி நாட்களை பற்றி இருவரும் பேசிக் கொண்டே., அவள் வீட்டிற்கு நடந்தோம்., வீடு திரும்பியவுடன் சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பினோம்., மாடத்தில் அவள் தோழிகளுடன் நின்று கொண்டு இருந்தால்., கை அசைத்து பை காட்டி விட்டு கிளம்பினேன்.,முகத்தை அசைத்து கண்களாலேயே செய்கை காட்டினால்.,

ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தமும்., மூன்று மாதத்தில் கல்யாண நாளும் வந்தது.,
இதன் இடையே., போனில் அரட்டை., இ-மெயிலில் சாட்டிங் என்று., ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டோம்.,







ரிசெப்ஷன் நாள் (அல்லது) மாப்பிள்ளை அழைப்பு வந்தது ., இருபுறம் நண்பர்களும் சூழ சில உறவினர்களும் என்னோடு வேலை பார்க்கும் சக ஊழியர்களும் வந்து., மனம்  மகிழ வாழ்த்திவிட்டு சென்றனர்.,

அன்று மாலை இருவரும் மொட்டை மாடியில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்., மருதாணி இட்ட கைகள்., அதில் மயிலிறகாய் என் விரல்கள் கொஞ்ச நேரம் வருடி விளையாடிக் கொண்டிருந்தது., அந்தி மாலை பொழுதில் தென்னங்கீற்றின் நிழலில் சில உரையாடல்களுக்கு பின்பு சில மணித்துளிகள்., அவள் முகம் பார்த்து கொண்டு நானும்., என் முகம் பார்த்து கொண்டு அவளும்., இருவரும் மௌனத்தில் திளைத்து கொண்டிருந்தோம்.,



மறு நாள் திருமணத்தில் ஜானவாசம், காசியாத்திரை எல்லாம் முடித்து பல வருடங்களாய் ஏங்கி கொண்டிருந்த அந்த நாழி வந்தது , என் மகரந்த பூவுக்கு, மலர் மாலை சூட்டி., திருமாங்கல்யம் கட்டி.,
என் தேவியை என்னாவியோடு ஒன்றென கலந்து அக்னியை சுற்றி வந்து நானும் அவளும் பல சத்ய பிரமாணங்கள் ஏற்று கொண்டோம்., எங்கள் காதல் வாழ்கையை திருமண தாம்பத்ய வாழ்கையை துவக்கி வைத்தோம்., ஊர் உறவினர் நண்பர்கள் பெற்றோர்கள் மூத்தோர்கள் என்று நூற்றுக்கனக்கானவர்களின் அகம் மகிழ்ந்து வாழித்திய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எங்கள் மேல் அக்ஷதை மலர்களாய் வந்து விழுந்தன., அம்மி மித்திக்க மெதுவாய் அவளுக்கு வலிக்காமல் அவள் மெல்லிய விரல்களில் மெட்டியை போட்டு., அவளோடு சேர்ந்து வானத்தில் அருந்ததி பார்த்தேன்.,



அதன் பிறகு நலங்கு., குட்டி குட்டியாய் பல விளையாட்டுகளை விளையாடி களித்தோம்., தேங்காயை மலர் பந்தாய் உருட்டி விளையாடுவது., தலைகளில் அரிசியை கொட்டுவது., தலை மேல் அப்பளம் உடைப்பது., இப்படி சில விளையாட்டுக்கள் அதில் குடத்தில் மோதிரம் பொட்டு அதை தேடுவது என்று ஓர் விளையாட்டு.,  குடத்தில் மோதிரம் பொட்டு விட்டு., அவள் எடுக்கட்டுமென்று நானும் நான் எடுக்கட்டும் என்று அவளும் முதல் முறை இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லாமலே விட்டு கொடுத்துக்கொண்டிருந்தோம்., மறு முறை என் கையில் வைத்துக்கொண்டே தேடுவது போல் நடித்து கொண்டிருந்தேன்., கடைசி முறை இருவரும் ஒரே மோதிரத்தை எடுத்தோம்.,


அதன் பின் க்ரஹப்ரவேசம் மாப்பிளை வீட்டிற்கு பெண்ணை அழைத்து செல்லுதல்., அங்கேயே சத்தரத்தில் எங்கள் ரூமிற்கு அழைத்து சென்று., அங்கு சில சாங்க்யங்கள்., அதற்க்கு பிறகு, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்க்கு என்ன பெயர் சூட்டலாம் என்றும் ஆணாக இருந்தால் என்ன பெயர் பெண்ணாக இருந்தால் என்ன பெயர்., அது அழுதாள் எப்படி சமாதானம் செய்வோம் எப்படி தாலாட்டுவோம்., என்று ஒரு பொம்மையை வைத்துகொண்டு சில விளையாட்டுக்கள்., இருவருக்கும் நடுவில் ஒரு விதமான நெருக்கத்தை உண்டுபண்ணியது இந்த விளையாட்டுக்கள்.,
உணவருந்தும் வேலையில் ஒரே இலையில் இருவர் உண்பது., அவளுக்கு நான் ஊட்ட எனக்கு அவள் ஊட்ட., எங்கள் இலையை சுற்றி வண்ண கோலங்கள் போட்டு., தீபங்கள் ஏற்றி., சுற்றி நின்று நண்பர்களும் தம்பி தங்கை அண்ணன் அக்கா மார்கள் எல்லாம் கலாய்க்க வெட்கத்தில் இருவரும் ததும்பினோம்.,
இப்படி ஒவ்வொரு தருணத்திலும் எங்களுக்குள் நெருக்கம் ஒரு விதமான மயக்கம்., சில மணித்துளிகள் தயக்கம்., இதுவரை அறிமுகம் இல்லாத வெட்கம் என்று பல வகையான உணர்சிகளை சொல்லி தந்தது எங்கள் கல்யாணம்., வாழ்கையில் முதல் முறை ஒரு பெண்ணை தீண்டி., காதல் பார்வையோடு பார்த்து., இனி உனக்காக நான் இருப்பேன்., உன் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பேன்., உன் தாய் தந்தை சகோதரர்கள் அத்தை மாமா சித்தி சித்தப்பா என்று இத்தனை உறவையும் நீ பிரிந்து வரப்போகிறாய் .,இனி எலாமுமாய் நான் இருப்பேன்., என்று பலவாறு வாக்கால் ஆன்மாவை காதல் சாசனம் கொடுத்தது இதயத்தில் இவள் உனக்கென பிறந்தவள் இவளிக்காக நீ எதை வேண்டுமாயினும் துறக்கலாம்., என்று ஒரு ஒளி கேட்க தொடங்கியது.,




சந்தியா காலம்., வெளியில் அழகிய மழை சாரல் விழும் வேலையில்., உள்ளே அமுதாக சில பாடல்கள் ஆர்கச்ட்ராவில் சிலர் ஆடி பாடிக் கொண்டிருக்க., நாங்களும் அந்த மெல்லிசை மழையில் நினைந்து முடித்து ஒரு மணிநேரம் இருவரும் சேர்ந்து நின்று போடோ செஷன் முடித்து இரவு உணவருந்தி சென்று சுமார் 9 மணிக்கு நண்பர்களுக்கு பாசுலர்ஸ் பார்டிக்கு பணம் கொடுத்து விட்டு அறைக்கு வந்து அமர்ந்தேன்., அவளை சில நேரம் கழித்து தன் வீட்டார் வந்து உள்ளே தள்ளி விட., எப்படியோ முதிலிரவை முடித்தேன்.,




அடுத்த நாள் காலையில் டிபன் முடித்து மங்களூரிலிருந்து பெங்களூருக்கு பஸ்ஸில்  கிளம்பினோம்., அனைவர் முன்னமும் தைரியமாக இருந்தவள் என்னருகில் அமர்ந்து பேருந்து கிளம்பும் போது அவள் விழிகளில் இருந்து இரு துளிகள் என் கை மேல் விழ.,
என் மனதில், " கோடி கணக்கில் திருமணம் செய்வது., ஒரு பெண்ணை வேறு யார் வீட்டுக்கோ கண்ணை மூடி அனுப்பி வைப்பதற்காகவா" என்று ஒரு நொடி நானும் அவள் வேதனை உணர்ந்து துடித்தேன்., ஆனால் இதுதான் வாழ்கையின் அதிலும் பெண்ணாக பிறந்தவளின் நியதி என்று புரிந்தேன்., அவளுக்கு ஆறுதல் சொல்ல தெரியாமல் அவளுக்கு எல்லாமுமாக நான் இருப்பதாய் அவள் மலர் கரங்களை என் இரு உள்ளங்கை நடுவில் வைத்து மூடினேன்., சட்டென்று விழிகளை முந்தானையில் துடைத்து கொண்டு., தன் துக்கைத்தை துடைத்துவிட்டது  போல் நடித்தால்., கொஞ்சம் கொஞ்சமாக பஸ்ஸில் அனைவரும் அடித்த கூத்தில் கலாட்டாவில் துக்கம் மறந்து சிரிக்க ஆரம்பித்தால்., இப்படி அவள் அன்பு, அறிவு, அழகு, ஆற்றல், ஐஸ்வர்யம், விவேகம், தைரியம், நளினம், நாணம், வெட்கம், அடக்கம், அச்சம், மடம், நாணயம், திறமை, தூய்மை, தாய்மை, உண்மை,  என்று ஒரு பெண்ணுக்கு என்னென்ன வேண்டுமோ அது அனைத்தும் இவளிடம் என்னவளிடம் சரண் அடைந்திருப்பதை புரிந்தேன்., மனம் மகிழ்ந்தேன்., அந்த ஆண்டவன் நான் சித்தரித்த என்னவளை நான் நினைத்தபடியே என்னிடம் சேர்த்து இருக்கிறான் என்று அவருக்கும் நன்றியை தெரிவித்தேன்.,






இரு மாதம் கழித்து ஒரு நல்ல நாள் பார்த்து., அவளை அவள் அம்மா வீட்டிக்கு திரும்ப அழைத்து வந்தேன்.,
இரண்டு நாட்கள் அவளை இங்கேயே விட்டு விட்டு, நான் மட்டும் வேலை நிமித்தமாக மீண்டும் பெங்களூருக்கு சென்று இன்று மீண்டும் திரும்பினேன்., வந்து பார்த்தால்., வீடு பூட்டி கிடக்கு., அவர்களுக்கு கால் செய்தால் எங்கேயோ கோவிலுக்கு சென்றிருப்பதாக சொல்ல., அவர்கள் வரும் வரை இங்கு வந்து இந்த இயற்கையை என் காதல் நாட்களோடு  இணைத்து ரசித்து கொண்டிருகிறேன்.,

திடீரென்று என் விழிகளை பின்னிருந்து அவள் உள்ளங்கை மூடுகிறது.,

சன்ஜய்:
உன் பெயரை நான் சொல்லிடுவேன் கவிதையே.,
ஆனால் இந்த அலைகள் பாவம் இத்தனை வருடங்களாய் சொல்ல முயல்கின்றது.,
அதை முதலில் கேட்டுவிடு.,





கன்னத்தில் ஒரு முத்தமிட்டு.,

நிஷா:
"அமாம் பெரிய கவிஞர்., இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க., உங்கள உங்க அத்த வீட்ல இல்ல இருக்க சொன்னேன்"..........,



என தொடரும் எங்களின் கல்யாண காதல் உரையாடல்.....,

No comments:

Post a Comment