கவிதை துகள்கள்...
Wednesday, September 29, 2010
கோவிலும் கல்லறையும்
நெஞ்சுக்குள் கோவில் கட்டினேன் உனக்காக,
நீயோ-
கண்களிலேயே கல்லறை கட்டிவிட்டாய் எனக்காக..
உன் நினைவில்
தெரு முனையில் மங்கிய ஒளியில்,
ஒரு தெரு விளக்கின் கீழ் உன் நினைவில் நான்,
அழகிய வெண்ணிலவில் நீ...,
மழை துளிகள்
அவளோடு சேர்ந்து நினைந்தபோது,
மழைத்துளி முத்தம் கொடுத்தது,
அவள் பிரிந்தப்பின் ஏனோ அதே மழைத்துளி,
முள்ளாய் குத்துது..,
நீயும் நிலவும்
தெரியாமல் பார்த்தது கண்கள் உன்னை,
தெரிந்தே தொலைத்தது இதயம் என்னை,
ஏனோ உன்னுடல் சேர்ந்த போதும் மண்ணை,
இரவில் நிலவாய் சேர்கிறாய் நீ விண்ணை..,
கஜேந்திர மோக்ஷம்..
அம்புலி காயும் ஈர நடு நிசியில்,
அந்த முதலை காத்திருந்த தடாகக் கரையில்,
அரியென்று களிறொன்று தனியாய் சிக்கி பிளிற,
அம்பரம் கிழித்தாயிரம் மின்னற்போல் நீ வர,
அந்த யானையின் அகத்திலிருந்த ஆழியன்ன பக்தி,
அதை எனுக்குமருளி தருவாய் ஹரி நீ முக்தி..,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
HARISH D
View my complete profile