Sunday, October 24, 2010

நினைவுகளே நிஜம் பகுதி - 3

MyFreeCopyright.com Registered & Protected






நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது.,ஒரு கால் சந்தேகமே இல்லை அவளே தான்..,என் தேவதை " குரு நான் எந்த கலர்  டிரஸ் போடட்டும்., வைட்டா இல்ல ப்ளாக்கா?" என்றாள்? " வைட் கலர் சுடில வா., உன்ன முதல் முதல் நான் அந்த ட்ரஸ்ல தான் பாத்தேன்.., இன்னைக்கு உனக்கொரு ஸர்ப்ரைஸ்  வச்சிருக்கேன் ஸீக்ரம் வா"  என்றேன்.." இந்தா கெளம்பிட்டேன் கெளம்பிட்டேன்" என்ற படி பர பரப்பாக போனை கட் செய்தால்.., சில மணிநேரங்கள் ஓடியது.., வெறும் முட்பது நிமிடம் ஆகக்கூடும் அவள் அக்கா வீட்டிலுருந்து காலேஜுக்கு., ஏன் இன்னும் வரவில்லை என்று மனம் பதறியது.., நானும் என் நண்பர்களும் மாற்றி மாற்றி அவள் மொபைலுக்கு முயற்சு செய்து கொண்டே இருந்தோம்., அவள் ஏனோ பதில் அளிக்கவே இல்லை.., தான் கிளம்பிவிட்டதாக சொல்லி 4 மணி நேரம் ஆகிவிட்டது.., அவள் அக்கா வீட்டில் யாருமில்லாததால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..,
மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வோமென கால் செய்தேன்., அவள் போன் வழக்கம் போல் அடிக்க துவங்கியது.." ஹலோ" என்றது ஒரு கரக்கரத்த குரல்.., " மது இல்லையா" என்று கேட்டேன் "நீங்கள் யார்" என்று கன்னடத்தில் கணீரென கேட்டது அக்குரல்; "நான் குரு அவளோட பிரெண்ட் நீங்க யாரு மதுவோட போன் உங்க கைல எப்படி வந்துச்சு" என்ற கேட்டபடி கன்னடத்திலே தொடர்ந்தது உரையாடல்.., "நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸவப்பா, உன்னோட பிரெண்டுக்கு  இங்க ஆக்ஸிடன்ட்டு ஸ்பர்ஷ் ஹாஸ்பிடல்ல  அட்மிட் பண்ணிருக்கு உடனே வா" என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்., என்ன செய்வது புரியவில்லை.., திடீரென யாரோ என் மது போனில் அவளுக்கு ஆகஸிடென்ட் என்று சொல்கிறான்  .,  இது நிஜமா., இல்லை பிரெண்ட்ஸ் யாருவது விளையாடி பார்கிறார்களா..,புரியவில்லை., என் பிரெண்ட் நம்பரிலிருந்து கால் செய்து பார்த்தான்.., அதே பதில்... அவர் சொன்னபடி ஸ்பர்ஷ் மருத்துவமனைக்கு அழைத்து விசாரித்தோம், தகவல் உண்மை என்று ஊர்ஜிதம் ஆனது..,  உடனே நாங்கள் ஏழு பேரும்  கிளம்பினோம்., பதட்டத்தில் நண்பர்களை முந்திக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றடைந்தேன்., 





 எமர்ஜன்சி வார்ட் அருகே இன்ஸ்பெக்டர் நர்சிடம் எதையோ விசாரித்து கொண்டிருந்தார்., அருகில் சென்று நர்ஸிடம்.., " என்ன ஆச்சு?? எதுவும் அடி படலையே சும்மா சுளுக்கு ச்ப்ரைன் அவ்ளோதான?? அவ வலி தாங்க மாட்டா எங்க உள்ள இருக்காளா நான் போய் பாக்கலாமா?? என்று செய்வதறியாது பிதற்றினேன்..., நர்ஸ்ஸும் போலீஸும் ஒருவரை ஒருவர் பார்த்து, "நீங்க யாரு??  உங்களுக்கு யாரு வேணும்?? யாரோட அட்டண்டர் நீங்க" என்று கேட்டனர்., "நான் நான் குரு அவளை நான் மதுவை அவளை" என்று சொல்லும் போதே பல வருடங்கள் எங்கேயோ தூங்கிக்கொண்டிருந்த என் கண்ணீர் துளிகள் கண்களை கசக்கி சிவக்க விட்டு வெடித்து வெளியேறியது.., " அவங்க புருஷனா" என்று கேட்டார் போலிஸ் இன்ஸ்பெக்டர்..,அதற்குள் ஓடி வந்து நண்பர்கள்.., விஷயத்தை எடுத்து சொல்ல.," தொண்டையை கவ்வி கொண்டிருந்த துக்கத்திற்கு மேலும் வலுக் கூட்டினார் நர்ஸ்., "ஐ எம் ஸாரி விபத்து நடந்த இடத்துலேயே அவங்க உயிர் போயிருச்சு., ஸ்பாட் அவுட்., லாரி மேல ஏறுனதுல அவங்க அங்கேயே இறந்துட்டாங்க, இப்போ மார்சுரில இருக்காங்க வாங்க இந்த பக்கம்., " என்றபடி எங்களை பிணவறைக்கு அழைத்துச்சென்றார்.., " இல்லை இல்லை அவள் என் மது கிடையாது அவள் என் மதுவாக இருக்காக் கூடாது" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே போனேன்., ஒரு ஐஸ் பெட்டியிலிருந்து அவளை வெளியில் எடுத்து ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து மேல் மூடப்பட்டிருந்த வெள்ளை போர்வையை சற்று விளக்கினர்,  பார்த்தவுடன் இதயம் சுக்கு நூறாகி போனது, அவள்தான் என்னவள்தான், என் மது தான்.., காய்ந்து போன உதிரத்தின் சாயம் அவள் முகத்தை மறைத்த நிலையில், முதல் முறை நான் பார்த்து ரசித்த அதே வெள்ளை சுடிதார் கிழிந்த நிலையில், அதே மெழுகு உடல் நசுங்கிய நிலையில், அதே மான்விழிகள் பிதுங்கிய நிலையில்., நான் மெட்டி போட்டு மருதாணி இட்டு முத்தமிட துடித்த அவள் கால் விரல்கள் சிதைந்த நிலையில்., காற்று நுழைந்து வாசமாக வெளிவர தவம் கிடந்த அவள் நாசி இன்று நசிந்த நிலையில் கிடந்தன., அவளை மடியில் ஏந்த முடியாமல் மெல்ல துக்கம் கவ்விய தொண்டையை உடைக்க முற்பட்டு அதுவும் முடியாமல் எரிமலை குமருவதாய் "போகாதடி செல்லம்,  நீ இன்னமும் என்னோட என்கூடதான் இருக்க., நமக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தம், 6 மாசத்ல   கல்யாணம், நம்ம அப்பா அம்மா எல்லாம் ஒத்துகிட்டாங்க, இத சொல்லதான்டி ஓடி ஓடி வந்தேன்,  மாலை மாத்தி மெட்டி பொட்டு தாலி கட்டி அம்மி மிதிச்சு அருந்ததி பாத்து நம்ம வாழ்கைய ஆரம்பிக்கனும்னு சொன்னயே மது., இப்படி என்ன விட்டுட்டு வழி தெரியாத ஊருக்கு நீ மட்டும் தனியா கிளம்பிட்டியே, வந்துருடி என் கிட்ட திரும்பி வந்துரு  உன்ன விட்டா எனக்கு வேற யார் இருக்கா?? உலகமே இருட்டி போகுதுடி இத பார் இங்க பார் ஹேமா, வர்ஷா, கார்த்திக் எல்லாம் உன்ன பாக்கதான் வந்திருக்காங்க., நர்ஸ்ஸு நீ இறந்துட்டதா சொல்றாங்க இல்லன்னு எந்திருச்சு சொல்லுடா " என்று கதற.., நண்பர்கள் சமாதானபடுத்தி அவளை அழைத்து இல்லை அவள் உடலை எடுத்து அவள் அக்கா வீட்டிற்க்கு சென்றோம்; இரவு முழுதும் அவள் காலருகே அமர்ந்திருந்தேன் அமைதியாக அடிநெஞ்சில் கனவுகளுக்கு கொள்ளிவைத்தபடி., அடுத்த நாள் காலை என் அப்பா அம்மாவும் அவள் அப்பா அம்மா வந்திறங்கினர்; அவளை பார்த்து அத்தையும் மாமாவும் அழுததில் என்னிதயம் பல ஈட்டிகளை தாங்கி போர் செய்து கொண்டிருக்கும் பிளிரியை போல் அலறியது..,
நெருப்பில் எண்ணை ஊற்றி  என் காதல் பூ உள்ளே இறங்கி எரிந்து கருக தொடங்கியது.., அம்மாவின் மடியில் கொஞ்ச நேரம் தலை சாய்த்து அழுது தீர்த்தேன்.., சொந்தங்களின் ஆறுதல் நண்பர்களின் அக்கறை., எல்லாம் என்காதுகளில் மெல்ல மெல்ல நுழைய மறுத்தது., நேரம் கடத்தாமல் கொண்டு செல்வோம்.., என்றது ஒரு குரல்.., "ஐயா பாட காட்டியாச்சு" என்றது மறு குரல்., "என்ன ஆச்சு எப்படி ஆச்சு" என்று கேட்டுக் கேட்டு புண்ணில் முல் தைத்தது இன்னொரு குரல், எல்லோரும் திடீரென்று அவளை தூக்கி கொண்டு அவர்கள் முறைப்படி கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி கொண்டே கிளம்பிச் சென்றனர்.., நானும் பின் தொடர்ந்தேன்.., நண்பர்கள் பெற்றோர் யார் சொல்லியும் நிற்கவில்லை., மின்சார தகனத்தில் அவள் எரிய துவங்கினால்; அவள் கால் நகத்தில் மருதாணி காயவில்லை; கண்ணில் வைத்த கருமை ஆறவில்லை; அதற்குள் நரம்புடல் நசுகி உயிர், காற்று வெளியில் கலந்து விட்டதே.., மெதுவாய் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து அவளையே நினைத்து நடக்க ஆரம்பித்தேன்..,


எங்கே அவளது உயிர்.., எங்கே அவளது கனவுகள்.., எங்கே அவள் பேசிய வார்த்தைகள்; எங்கே அவள் பார்த்த பார்வைகள்; மண்ணோடும் விண்ணோடும்; நதியோடும் மதியோடும்; பிறையோடும் கரையோடும்; இறகோடும் இரவோடும்; முகிலோடும் பகலோடும்; கடலோடும் காற்றோடும் கலந்து விட்ட யாதுமாகி நின்றுவிட்ட அவள் என் கண்முன்னே இல்லை; அவள் பிம்பம் மட்டுமே கானலாய் நிற்கிறது.., கனலாய் என்னை சுட்டு எரிக்கிறது..,நினைவுகளின் பெயரில்.., உயிர் வேரினில் தீயிட்டு உண்மை உணரும் வரை வதைத்து வாட்டி எடுக்கும் வேதனையின் மறு பெயர் காதல்.., அவள் பிரிவு, தாங்க முடியாத வலி.., சொல்ல முடியாத சோகம்.., ஆனால் உண்மையில் அவள் எங்கே?? உடலை பிரிந்த உயிர் எங்கே போனது?? நினைவுகளாய் உரு மாற்றம் கொண்டு என்னோடு வாழ்கிறதா?? அவளை நான் காதலித்தேன், அவள் உடலை அல்ல., இறந்து அவளை அவளுயிரை சேர்ந்திடவா., இன்னொரு கேள்வி, இறந்தால் அவளை சேர்வேனா?? கண்முன்னே நடமாடும் உடல் காணாமல் போகுது., அந்த உடல் பழுதாகும் வரை இருக்கும் உயிரும் திடீரென்று மாயமாகுது., இதன் நடுவில் தற்கொலை முட்டாள்தனம் என தோன்றியது, நினைவுகளே நிஜம் என்று விளங்கியது. எங்களின் நினைவுகளை, அதை அநாதியாக்க மனம் வர வில்லை., என் பெற்றோர், விவரம் தெரிந்ததிலிருந்து நான் கேட்டதை மறுக்காமல் இது வேண்டும் அது வேண்டுமென்று என்னை கடவுளிடம் கேட்க விடாமல் வளர்த்த அவர்களையும் அநாதியாக்க மனம் வரவில்லை.., அத்தை மாமா அவர்களுக்கு  மருமகனாகும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போயினும்; மது அவர்களுக்கு செய்ய நினைத்தவற்றை இனி அவளிடத்தில் இருந்து நான் செய்ய நினைத்தேன்.., தொலை தூரம் வந்து விட்டேன்., அவர்கள் உயிரோடு இருக்கும் வரை இருப்போம்.., அல்லது எனக்கு அழைப்பு வரும் வரை அவள் நினைவுகளோடு இருப்போம்.., அந்த காலதேவனின் கருப்பு கப்பல் கரை தட்டும் வரை., காத்திருப்போம்.., வாழ்க்கை பின்னால் என்ன நடக்குமோ., வாழும் வரை அவள் நினைவோடு இருப்போம்..,
அவள் நினைவோடு இருப்போம்.,.
அவள் நினைவோடு இருப்போம்..,

நினைவுகளே நிஜம் பகுதி - 2

MyFreeCopyright.com Registered & Protected



ஒரு ரெசோர்ட்டில் தங்கி ஊர் சுற்றி பார்த்து, போட்டிங், ராப்ளிங், ஃபையர் காமப்., என்று கொட்டம்  அடித்து கொண்டிருந்தோம்., நானும் நல்ல ஒரு சந்தர்பத்திற்காக காத்திருந்தேன்..,
ஒரு இரவு உடன் வந்தவர்கள் அனைவரும் நான்-வெஜ் என்பதால் ஒரு பக்கம் அமர்ந்து ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருன்தனர்; அவளோ  அய்யர் மாமி ப்யூர் வெஜ், அதனால் தனியாக அமர்ந்து ஏதோ பாட்டு கேட்டு கொண்டிருந்தாள், அவளை தனிமையில் விட மனமில்லாமல் சென்று அவளிடம் கடலை போடா ஆரம்பித்தேன்.., மெதுவாக அந்த இரு ஆண்டுகளில் கல்லூரியில் அரங்கேறிய காதல் கதைகளை அலஸ 
ஆரம்பித்தோம், தீடிரென இருள் சூழ்ந்தது,.., கரண்ட் கட்., ஸர்வர் கேன்டல்  கொண்டு வந்து வைத்தான்; அந்த மெழுகுவத்தி ஒளியில், என் இந்த மஞ்சள் மதியிடம் என் காதலை சொல்லியே தீரவேண்டுமென்று நினைத்தேன்.., எப்படி சொல்வதென்று தெரியவில்லை.., உலகித்திலே மிகப் பெரிய கனமான   ஒரே கணம் தன் காதலை காதலியிடம் சொல்வதுதான்.., அந்த தருணம் எதிரிக்கும் வரக்கூடாதென இன்றும் நினைக்கிறேன்..,


மெல்ல ஆரம்பித்தேன்;
"மது கொஞ்ச நாளாவே என் மனசு என் பேச்ச கேக்க மாட்டேன்னுது., கவிதை எழுதனும்னு நெனச்சா என் மனுசுல இருக்குற அந்த பொண்ணு பேர் மட்டும் தான் ஞாபகத்துக்கு வருது.., காதுல விழற சத்தமெல்லாமும் சங்கீதமா கேக்குது., யாராவது திட்டுனா கூட கோவமே வரமாட்டேன்குதுபா., கண்ண மூடி தூங்கற வரைக்கும் அவளோட நெனப்பு; கண்ண மூடுனா அவளோட கனவு.., நிலவு நீர் நதி வானம்னு செமையா பெனாத்துறேன்.., அவளுக்காக சமையலெல்லாம் கத்துக்குறேன்., அவளுக்காக நான்-வெஜ் ஒரே அடியா நிறுத்திட்டேன்., ஹாட்ரிக் சிக்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வர வர கிரிகெட்ல கலக்குறேன்.., அவ கூட இருந்த உலகமே என் பேச்ச கேட்டுதான் நடக்குற மாதிரி இருக்கு., ஃபிரண்ட்ஸ்  கூடவே இருந்தாலும் தனிமையில் இருக்குற ஒரு ஃபீல், கண்ணாடி முன்னாடி நின்னு நான் ஒருத்தனே சிரிக்கிறேன்.., ஏதாவது ரொமாண்டிக் லுக் வருதான்னு பாக்குறேன், இதெல்லாம் பரவாயில்ல ஒரு நாள் சூப்பர் மேன் மாதிரி பேன்ட்ட  போட்டு காலேஜுக்கு கெளம்ப இருந்தேன்., கோயிலுக்கு போய் கடவுள் கிட்ட நான் பாஸ்ஸாகுறேனோ இல்லையோ அவ பாஸ்ஸாகிடனும்னு வேண்டிக்குறேன்.,    ஏன் மது இதெல்லாம் காதலோட ஸிம்டோம்ஸா ? உனக்கு இந்த மாதிரி ஏதாவது நடந்திருக்கா????" என்று கேட்டேன்..,
வெட்கம் கலந்த குறும்போடு அவளும்;
" ஆமாம் காலையில எழுந்து  காபியில் சக்கரைக்கு பதிலா உப்பு போட்டு குடுச்சிருக்கேன், திடீர்ன்னு கிளாஸ்ல நான் ஒருத்தியே எதையோ நெனச்சு சிருச்சு அவனால நல்லா திட்டு வாங்கியிருக்கேன்.., அம்மா கூட கோயிலுக்கு போனப்போ அவன் நெனப்புல செருப்ப போட்டுகிட்டே உள்ள போயிட்டேன்; நானும் அவனுக்காக இப்பெல்லாம் நான்-வெஜ் சமைக்க ஆரம்பிச்சிருக்கேன்.., ஃபிரெண்ட்ஸ் கூட இருந்தா "கொஞ்ச நேரம் எங்கள தனியா விடுங்கலேன்"னு கத்த தோணுது, அவன் கூட வேற ஏதாவது பொண்ணு பேசினா உடனே எங்க இருந்து அந்த கோவம் வருதோ தெரியல அவன புடிச்சு நல்லா நாலு அடி போடாணும்னு  தோணும், அவன் மேல அவ்ளோ பொஸஸிவ்னஸ், காரணமே இல்லாம சிரிப்பேன்., பசிச்சாலும் சாப்ட முடியாம, படுத்தாலும் தூங்க முடியாம, அந்த கொடுமையான ராத்திரிய சகிச்சுகுட்டு இருப்பேன், லீவ் வந்தா எப்படா காலேஜ் தொரக்கும்னு இருக்கும், டி.வி ல கிரிகெட் மேட்ச் பாத்தா உடனே அவன் ஞாபகம் வந்துரும், வீட்ல ஏதாவது அவனுக்கு பிடிச்சத பண்ணா அத அவனுக்காக எடுதுகுட்டு வரணும் போல இருக்கும்.., காலைல வீட்டு வாசலுல கோலம் போடறப்போ மறந்து போய் அவன் பெயர் எழுதிடுவேன்.,
அவன் கூட இருக்குறப்போ சுத்தி இருக்கிறது எல்லாம் மறந்து போகும், இப்படி எக்கச்சக்கமா இருக்குப்பா...."என்றாள்,

உடனே நான் " சரி அந்த லக்கி பாய் யாரு??" என்று கேட்டதற்கு., " ஃபர்ஸ்ட் நீதான ஆரம்பிச்ச முதல்ல அந்த பொண்ணு யாருன்னு நீ சொல்லு அப்புறம் நா சொல்றேன்???" என்று ஒரு குறும்பு பார்வையோடு கேட்டாள்..,
"நம்ம தமிழ் பொண்ணுதான்., அவள உனக்கு கூட நல்லா தெரியும், கும்பகோணத்துல கோபால கிருஷ்ணன் பத்மாவதி தம்பதியருக்கு பொண்ணா எனக்காகவே..  02/03/1987 காலைல 6 .45 சூர்யோதயத்துக்கு முன்னாடி மார்கழி மாச முன்பனி மலர் போல மதுன்னு ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு.., அந்த மதுவத்தான்.., நான் லவ் பண்றேன்..,"என்று அவளை பற்றி சொல்ல சொல்ல அவள் முகத்தில் ததும்பிய வெட்கம் என் அகத்தில் தேன் சுரக்க வைத்தது..,சொல்லி முடித்தவுடன் இப்போ நீ சொல்லு " அந்த பையன் யாரு"ன்னு என்றேன்., ஒரே வார்த்தையில் "குரு" என்றால்..,
அவள் விரல்களை முதல் முறை காதலோடு பிடித்து " உன்ன என் உயிர் இருக்குற வரைக்கும் விடமாட்டேன் ஐ லவ் யு"னு சொல்லி உலகம் மறந்து அவளின் மோதிர விரலில் லேசாக  பூப்போல ஒரு முத்தம் வைத்தேன்..,
திடீரென கரண்ட்  வந்ததில் அவள் விரலில் நான் முத்தம் வைத்து கொண்டிருப்பதை நண்பர்கள் பார்த்துவிட; வெட்கத்தில் தாமரையாய் அவள் கன்னங்கள் சிவந்து; முகத்தை மூடிக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் .., எங்களின் நெருங்கிய பழக்கம் காதல்தான் என்று நண்பர்களுக்கு தெரியும், இன்று எங்கள் காதல் அப்பட்டமாக திரையிடபட்டுவிட்டது; எல்லாம் கலாய்க்க தொடங்கினார்கள்.., மெல்ல அங்கிருந்து நழுவி அவளை பின் தொடர்ந்தேன்..,


மொட்டை மாடியில் முழு வெண்ணிலவின் ஒளியில்; தென்னங்கீற்றின் நிழலில் மது நின்றிருந்தால்.., நின்றிருந்தால் என்று சொல்வதை விட..,
காத்திருந்தாள் என்பது தகும்., அருகில் சென்று" என்னபா கோவமா??" என்று கேட்டேன்.., "இல்ல பின்ன எல்லார் முன்னாடியுமா அப்படி பண்ணுவா".., கார்மேகம் போல காற்றோடு அவள் காதருகே கவிதை பாடிக் கொண்டிருந்த கூந்தலை ஒரு கையால்மெல்ல கோதிய படி..," என் கூட வாழ்க்க முழுசும் இதே போல  கை கோர்த்து வருவியா" ன்னு மறு கையால் அவள் கை பிடித்து கேட்டேன்..,என் கன்னங்களில்  அவள் இரு கைகள் வைத்து..," உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்.., உன்கூட வாழ்க்க முழுசா மட்டுமில்ல, வாழக்கைக்கு அப்புறமும்., உன் கூடவே வருவேன்"..,என்றாள்..,சொல்லி முடிக்கும் முன்பு அவள் பூவிதழில் என்னிதழ் புதைத்தேன்..., சில மணித்துளிகள் மௌனத்திற்கு பிறகு.., மெல்ல மெல்ல இருவரும் எங்கள் காதலை வெளிபடுத்திய பின்பு..,அவளிடம் கேட்டேன்.., "ஆமா என்ன நீ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்ச??
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா??" என்றேன்.., "இல்லை முதல் முறை பார்த்த போது உன் பேச்சும் செய்கையும் அதிலிருக்கும் ஸ்டைலும்  பிடித்தது.., பின் உன் கண்ணியம்.., கண்ணுக்கு கண் பார்த்து பேசும் தோரணை., இப்படி பல விஷயங்களை உன்னிடம் நேசிக்க ரசிக்க தொடங்கினேன்.., அந்த நேசம் நாளாக நாளாக உன் ஒவ்வொரு பார்வை வலையில் சிக்கி தவித்தது என்னிதயத்தில் காதலை விதைத்தது.., உன் கவிதை புத்தகத்தில் உயிர் வாழும் கவிதைகள்; அதை நான் திருடி வைத்துக்கொண்டு அதில் வளர்க்கும் மயிலிறகு, இப்படி அனைத்தும் என்நெஞ்சில் உன் மீது என் காதலை கொஞ்சம் கொஞ்சமாக நீரூற்றி வளர்த்தது.," என்றாள்., இப்படி பேசிக்கொண்டிருக்கையில் பேச்சின் நடுவில்" சரி எப்ப கல்யாணம் பண்ணலாம் " என்றேன்., அதற்கு.., " காதலுக்குதான் வயசு காலம் எதுவும் தேவையில்ல; கல்யாணத்துக்கு எல்லாமே தேவை.., முதல்ல நீ அடுத்து என்ன பண்ண போறன்னு சொல்லு.." என்றாள்.., " உனக்கே தெரியும் நம்ம படிப்பு எந்த அளவுக்குன்னு.., ஸோ ஒரு பிஸ்னஸ் பண்ணலாம்னு இருக்கேன்.., அப்பா பெரிய   தொழிலதிபர்., ஆனா அவரோட கம்பெனிய பாத்துக்குற அளவு நமக்கின்னும் பக்குவம் பத்தாது..,
 ஸோ கேரளாவுல எர்ணாகுளத்துல இருக்குற என் மாமா கூட அப்பாவோட காசுல 2 போட் ஹௌஸ் வாங்கி விடப்போறேன்.., என்னால் இந்த பிஸ்னஸ்ஸ நல்லபடியா நடத்த முடிஞ்சா அப்புறம் அப்பாவோட பிஸ்னஸ் என் கைல..," என்றேன்.., "ம்ம் ப்லான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..,ஆனா ஒரு கண்டிஷன்.., நீ எப்ப உன் பிஸ்னஸ்ல வெற்றி அடைஞ்சு உங்க அப்பாவோட பிஸ்நஸ்ஸ எடுத்து நடத்துற நம்பிக்க வருதோ அன்னைக்குதான் நம்ம கல்யாணம்" என்றாள் ..,
"தெரியாமத்தான் கேக்குறேன் அதென்ன இந்த பொண்ணுங்க எப்ப பாத்தாலும் ஒரு இன்ஷுரன்ஸ் கம்பெனில வர்ற விளம்பரம்  மாதிரி..,  கண்டீஷன்ஸ் அப்ளை, கண்டீஷன்ஸ் அப்ளை ங்கற மாதிரியே பேசுறீங்க..," என்றேன்.., " இல்லடா நானும் MCA பண்ணப்போறேன் IIT ரூர்கேல; ஸோ 3 வருஷம் திரும்ப இந்த பக்கமே வரமாட்டேன் அப்பப்போ நாம் எங்கயாவது சந்திப்போம், அதுக்குள்ள நீயும் ஒரு ஸ்டேடஸுக்கு வந்துரு எங்க அப்பா அம்மா கிட்ட நானே பேசுறேன், அதுக்கப்புறம் நம்ம கல்யாணம்., இதையெல்லாம் யோசிச்சிட்டு தான் அப்படி சொல்றோம்., பொண்ணுங்க என்னைக்குமே முன் ஜாக்ரதையா இருப்போம் தெரிஞ்சுக்கோ., ஆமா உங்க வீட்ல ஒத்துக்குவாங்க இல்ல" என்று ஒரு சந்தேகத்தோடு கேட்டால் "அதெல்லாம் கவலையே பாடாத சின்ன வயசுல இருந்தும் எங்க அப்பா நான் எது கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவாரு., அம்மா கொஞ்சம் கண்டிப்புதானாலும்  என் மேல ரொம்ப நம்பிக்க., நான் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியா இருக்கும்னு சொல்றவங்க ஸோ உன்னையும் அவங்க கண்டிப்பா வேண்டாம்னு சொல்மாட்டாங்க" என்று மாற்றி மாற்றி காதலர்களின் சலிக்காத உரையாடலை அன்று இரவு முதல் தொடங்கினோம்..,

" பெங்களூர் வந்தாச்சு எறங்குங்க எறங்குங்க" என்றார் கண்டக்டர்; ., பஸ் ஸ்டாண்டிலிருந்து கல்லூரிக்கு செல்லும் வழியில் என்னை கடந்து சென்றது ஆயிரம் நினைவுகள், அவளோடு நின்று கழித்து  களித்த பேருந்து நிழற்கூடம், காபி ஷாப், ரெஸ்டாரன்ட்., அந்த சாலை, கோவில் , எல்லாம் பாதி அப்படியே இருக்கிறது.., மீதி நகரத்தின் கால பரிணாம வளர்ச்சியில் முற்றிலும் காணாமல் போயிருந்தது.., மனிதன் தன் வசிதிக்காக சாலையோர மரங்களை வெட்டி இயற்கை அன்னையை  நிர்வான படுத்திவிட்டான்., இந்த பெங்களூர். .,  என்னை எனக்கு அடையாளம் காட்டிய ஊர்.., இன்று நான் என் தந்தையின் கம்பனிக்கு M.D. 2  போட் ஹௌஸ் வைத்திருந்தவன் இன்று 8 போட் ஹௌஸுக்கு ஓனர், வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில்.., அவளோடு காதல் இன்னும் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கிறது.., அவ்வப்போது ஃபோனில் அரட்டை, இ-மைல்ஸ், வீடியோ சாட்; அவ்வப்போது மாதம் ஒரு முறை சந்திப்பு என்று எங்களின் காதல் நிறைகுடமாய் நடுக்கடலாய் அமைதியாய் அசைந்தாடி கொண்டிருந்தது..,


இருவர் வீட்டிலும் பேசி அவளுக்கே தெரியாமல் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டேன் , அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்., 6 மாதத்தில் கல்யாணம்.,  இந்த இனிய செய்தியை சொல்லும்போது அவள் விழியில் சிறு பிள்ளையாய் குதித்தாடும் ஆனந்தத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்..,
கல்லூரி வாசலை வந்தடைந்தேன்.., வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கெட் டுகெதர் பார்ட்டி..,வேலை காரணமாக மூன்று ஆண்டுகளாய் வர இயலவில்லை., இன்று நண்பர்கள் பட்டாளம் எனக்கு முன் வந்து காத்திருந்தனர்.., அனைவரும் கை குலுக்கி கட்டி அணைத்து.., எங்கள் இத்தனை வருட பிரிவை தூளாக்கிக் கொண்டிருந்தோம்..,



நினைவுகளே நிஜம் பகுதி - 1

MyFreeCopyright.com Registered & Protected





என் பெயர் குரு, சிங்கார சென்னையை சேர்ந்தவன்., இப்போது பெங்களூருக்கு போய்கொண்டிருக்கிறேன், ஓசூரை கடக்கும் போதே நாசி வழி நுழைந்து உயிரை வருடி உள்ளே உறங்கி கிடந்த நினைவுகளை சீண்டி பார்த்தது பெங்களூரின் குளிர் காற்று., வானத்தில் திரை போட்டு அதில் மெல்ல படம் காட்ட ஆரம்பித்தது அந்த நாள் மேகங்கள்..

ஆறு வருடங்களுக்கு முன்பு;

அடித்து பிடித்து பிட் அடித்து பேப்பர் சேஸ் பண்ணி., கஷ்டபட்டு +2 பாஸ் செய்த சராசரி மாணவர்கள்ல நானும் ஒருவன்., நெட்டுகுப்பத்திலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும் எங்கு போனாலும் நண்பர்கள் பட்டாளம்., அப்பா பார்த்தார் இவன் இங்க இருந்தா உருப்பட மாட்டான்னு.., செல்ல பிள்ளை அதிலும் ஒத்த பிள்ளையான என்னை.., பெங்களூரில் இருக்கும் தன நண்பரின் கல்லூரியில் பி.ஸி.ஏ சேர்த்து ஒரு தனியார் மாணவர் விடுதியில் தள்ளி விட்டார்..,

கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.., நிறைய நண்பர்கள் எப்பொழுதும் விளையாட்டு, சினிமா, ஷாப்பிங், கிரிகெட், ஈவினிங் பார்ட்டீஸ் என புதிய பாதையில் மீண்டும் என் பழைய வாழ்க்கை சாயம் பூசி ஊருக்கேற்ப வண்ணம் மாறி கொண்டிருந்தது ..,
வழக்கம் போல கஷ்டப்பட்டு ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்த பெரு மூச்சில்.., இரண்டாம் ஆண்டுக்குள் நுழைந்தேன்   ..,
முதல் நாள் முதல் பாடமே வி.பி.., வாத்தியார் வழக்கம் போல தாலாட்ட துவங்கினார்.., நானும் உறங்க தயாரானேன் .,

தூக்கம் சொக்கும் நேரத்தில்., மெய் சிலிர்க்க மெல்லிய காற்றடிக்க வகுப்பறையே அமைதியாக இருக்க திகைக்காத தேனில் குழைத்த பூப்போல மென்மையான ஒரு குரல் " எக்ஸ்க்யூஸ் மீ, மேய் ஐ கம் இன்" என்ற படி ஒரு சிறகில்லாத வெள்ளை தேவதை, வகுப்பறை வாசலில் வந்து நின்றாள்;


அவள் என் இதய வாசலில் வந்து நின்று என்னை கேட்டது போல் இத்தனை ஜென்மங்களாய் பூட்டி கிடந்த பாசி படிந்த காதல் கதவுகள்  அவளின் குரல் கேட்டு பூ பூத்தது என் உயிரென்னும் உலகத்தில் வெள்ளை பனி படர்ந்தது, இதயத்தை யாரோ மயிலிறகால் வருடியதைப்போல் கூசியது; வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தது.,   இப்படி ஆயிரம் ஆயிரம் உணர்வுகளோடு போரிட்டு கொண்டிருந்த மனதை தன்னிலைக்கு இழுத்து வந்தது அந்த இடைவேளை மணியோசை..,

அவள் வந்ததும் அறிமுகம் செய்து கொண்டது என் தோழி ஹெமாவோடுதான்.., அதனால் மெல்ல ஹேமாவிடம் போட்டு வாங்கினேன்.., அவளும் பட படவென அந்த பெண்ணின் முழு ஜாதகத்தையும் அள்ளி தெளித்தால்;
பெயர்: மது; ( மதுமிதா )
ஊர்: தஞ்சை;
தாய் மொழி:தமிழ்
தந்தைக்கு பேங்க்கில் வேலை;  வேலையில் இடம் மாற்றத்தின் காரணமாக பெங்களூருக்கு வந்துள்ளதாகவும்; அவள் இப்போது பெற்றோருடன் வீட்டிலிருந்துதான் கல்லூரிக்கு வருவதாகவும் கூறி; " இவ்ளோ போதுமா இல்ல அவ அட்ரஸ், செல் நம்பர் இதெல்லாமும் வேணுமா"ன்னு கேட்டா.., அதற்கு நான் " இப்போதைக்கு இது போதும் வேற எதாச்சும் வேணுன்னா நானே கேக்குறேன்" என்றபடி நழுவ பார்த்தேன்.., அதற்குள் பிடித்து இழுத்து., " ஆமா நீ இதுவரைக்கும் எந்த பொண்ண பத்தியும் இப்படி விசாருச்சதில்லையே., என்ன மேட்டர்??" ன்னு குசும்போடு கேட்டாள் ஹேமா.., நானும் தெளியாத காதல் மயக்கத்தில் " இல்லப்பா  என் வாழ்க்கை அகராதியில் மதுவெனும் வார்த்தையே இருக்கக்கூடாதென நினைத்தேன்.,
இப்படி மதுவே என் வாழ்க்கை ஆகுமென நினைக்கவில்லை"..,
என்று சொல்லிக்கொண்டே திரும்பும் போது பின்னாலேயே நின்றுகொண்டிருந்தாள் மது.., காதல் மயக்கம் அதிர்ச்சி ஆனது..,
உடனே ஹேமா " ஹே மது நான் சொன்ன குரு இவன்தான் நம்ம கேங் லீடர் நம்ம காலேஜ் கிரிகெட் டீம் கேப்டன்" என்று அறிமுக படுத்த அவளும் குறும்புத்தனமாக சிரித்துக் கொண்டே
"ஹாய்" என்று கை கொடுத்தால்., நானும் "ஹாய்" என்று சொல்ல முயன்று., காற்று மட்டுமே வர கை கொடுத்து அறிமுகம் செய்துக்கொண்டேன்" அவள் கை பிடித்து அக்கணமே ஒரு மோதிரம் போட்டு காதலை சொல்லிவிட தோன்றியது.., வேண்டாம் அவளுக்கு நம்மேல் காதலை வரவழைத்து பின் நம் காதலை சொல்லுவோம் என்று முடிவி செய்தேன்..,


நாட்கள் கடந்தது.., நெருக்கம் அதிகமானது.,
தினமும் ஒரே பேருந்து., கொண்டு வரும் லன்ச் பாக்ஸ் உணவை இரண்டு பேரும் பகிர்ந்து உண்பது .., ஒரே குடையில் இருவர் மழைக்கு ஒதுங்கி நிற்பது ; அவ்வப்போது பார்க், காஃபி ஷாப், ரெஸ்டாரன்ட், தேட்டர், கோவில் அவளின் அக்காவின் திருமணம், என் சென்னை புது வீட்டு க்ரஹப்ரவேசம், என இருவரும் பிரிவுக்கு இடம் கொடுக்காமல் இந்த உறவுக்கு பெயர் சூட்டாமல் இணைந்திருந்தோம்; இடைவெளி குறைந்து குடும்ப விஷயம், பிடித்தது, பிடிக்காததென்று.., எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம்., அவளை இம்ப்ரெஸ் செய்ய அவ்வப்போது சில மொக்கை கவிதைகள்; எஸ் எம் எஸ்; ஜோக்ஸ் என்று அவளிடம் தூவிப் பார்ப்பேன்.., நயமாக அவை நடுவில் என் காதலையும் சொல்வதுண்டு..,  ஒரு நாள் நான் கல்லூரிக்கு வரவில்லை என்றால் " நேத்து ஏன்டா வரல " என்றபடி என் காதை செல்லமாக திருகுவாள், வலிக்காவிட்டாலும் வலிபதைப்போல் நடிப்பேன்.,  அவள் வரவில்லை என்றால் அன்று மாலையே அவள் வீட்டில் ஆஜராகி விடுவேன்,( காலையில் சென்றால் ஆன்ட்டி " ஏன்பா காலேஜ் போகல?" என்று கேட்பார்கள் அதனால் மாலை ); இப்படி நாட்கள் ஓட எங்கள் காதல் மரம் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி பூக்கள், பூத்து குலுங்க தொடங்கியது.., நண்பர்கள் எங்கள் நெருக்கத்தை காதல் என்று முடிவு கட்டி கல்லூரி முழுக்க அரங்கேற்றி விட்டனர்.., அவ்வப்போது " டேய் லவ்ஸ்தான???" என்று கேட்டு ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்., நாங்களும் " இல்லப்பா ஜஸ்ட் பிரெண்ட்ஸ்" என்றே சொல்லி நழுவிக்கொண்டிருந்தோம்..,  இருவரும் எங்கள் காதலை வெளிபடுத்தாமலேயே.., கல்லூரி வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.., நண்பர்கள் எட்டு பேரும் ஒரு முறை ஔடிங் செல்வதாக முடிவெடுத்தோம்,

குடகு மலை(Coorg) கர்நாடகத்தின் ஊட்டி; அந்த குளிர் சேர்க்கும் இன்ப மலைச் சாரலில் என் காதலை சொல்லவேண்டும் என்று தீர்மானித்தேன்.., குடகுக்கு சென்றடைந்தோம்..,

Tuesday, October 5, 2010

நட்பென்றும் மூப்படைவதில்லை





நட்பெனும் நீலவானில் கார்முகில்களாய் நாமிணைந்தோம் ,


இடி மழை மின்னலென உணர்சிகளில் துள்ளி குதித்தோம்,


கோடி நினைவெனும் முத்துக்களை ஆழியிதயங்களில் விதைத்திட்டோம்,


காலமெனும் காற்றடிக்க  கண்கலங்க கைகுலுக்கி  பிரிகின்றோம்,


 
தோழா-


 
மீண்டும் ஒருநாள் வாழ்வில் சந்திப்போமா தெரியவில்லை,



காரணம் மரணநாள் அறிந்து பிறந்தவன் எவனுமில்லை,



சந்தித்தாலும் மூப்புற்ற வெண்மேகமாயிருக்கலாம்  கவலையில்லை,



புலன்கள் செயலிழப்பினும்  நம்முயிரொத்த நட்பென்றும் மூப்படைவதில்லை..,

காதலெனும் அற்ப ஜீவி



இதயத்தின் இடுக்குகளில் ஒரு அற்ப ஜீவியின் அழு குரல்...

நண்பனின் பதிவு திருமணத்தில்,

 காதலிக்காக  சாட்சி கையெழுத்திடும்போது  என் காதல்...

Sunday, October 3, 2010

அவள் பீர் பாட்டில் மேல்

MyFreeCopyright.com Registered & Protected






அவளை மறக்கவே நான் விஸ்கி அடித்தேன்;
ஆனால் அவள் ஏன் பீர் பாட்டில் மேல் குத்தாட்டம் போடுகிறாள்???

Night in her memories

MyFreeCopyright.com Registered & Protected







When the world of light,

Goes off at night,

Boozing a peg Jin,

Melting in the music of mandolin,

I felt the kiss,

Given by the breeeze,

Living with her memories,

Loving all her love theories..,

One day i will come back for you

MyFreeCopyright.com Registered & Protected





Even in this death bed my days,

And your beautiful blue eyes and face,

Spinned me and your memories and flew,

Tell me how can i forget you,


Since we broke up after a mail,

My weekend parties were jail,

First time i fell deep in love flu,

How would i betray and say I love you,


I did'nt know how far you loved,

But now i feel lonely in crowd,

Hope i did'nt feel your love and you,

And felt abashed for i wasn't with you,


At last except my love every thing is fake,

Now the life ends for no one's better sake,

But my heart beat stops with a clue,

That one day i will come back for you...