Saturday, October 5, 2013

காதல் கண் மூடிதனம்



கவிஞனின் தாய் மொழியிலோ சொற்கள் வற்றி விடும்;
சிற்பியின் கரங்களோ உளி பிடிக்க மறந்து விடும்;
ஓவியனின் வண்ணங்களோ ஒரேவண்ணமன்ன தோன்றிவிடும்;
காதல் கண் மூடிதனமென அன்று அவனக்கு புரிந்துவிடும்,

Sunday, September 29, 2013

வாழவேண்டும் அன்பே உன்னோடு



வாழவேண்டும் அன்பே உன்னோடு,
வளர்பிறை போலேன்றும் தேயாது;
வா பெண்ணே கைகோர்த்து என்னோடு,
வெண்முகிலும் கொஞ்சும் மதியும் வரும் பொழுது,

நீ தேன்மலர் அன்பே நான்தானடி பொன்வண்டு,
நின்னை ருசிக்க உள்ளம் துடிக்குது,
சற்றே உறைந்து போகிறேன் உன் விழி கண்டு,
சுத்தமான தீயாய் அதில் காதல் மலருது,

தும்பை நிற மனம் கொண்டு,
உயிரே நீ என்னை கவர்ந்தது,
தூய்மையான நிலவை போன்று,
உன்னை கண்டதில் என் மனுமும் வெளுத்தது.,

உன் அழகான கன்னக்குழியில் ஒன்று,
என் நெஞ்சை கொஞ்சம் கில்லி பார்கிறது,
இன்னொரு குழியில் விழுந்துவிட்டேன் இன்று,
வெளிவரமாட்டேனென மனம் சிறுபிள்ளையாய் அடம்பிடிக்கின்றது 

வாழவேண்டும் அன்பே உன்னோடு,
வளர்பிறை போலேன்றும் தேயாது;
வா பெண்ணே கைகோர்த்து என்னோடு,
வெண்முகிலும் கொஞ்சும் மதியும் வரும் பொழுது...