Friday, July 22, 2011

கண்ணா









எழில்மிகு பூம்பொழில் கார்முகில் சூழ் சோலையிலே;
கார் குழலாள் பூங்கழலாள் ராதை அங்கே காத்திருக்க;
புலரும் பனிப்பொழியும் புனல் குளிரும் வேளையிலே;
 செவ்விதழோன் புல்லாங்குழலோன் கண்ணன் நீ பாட்டிசைக்க;
கறவைகள் கண் மூடி செவி சிமுட்டி மயங்கி நிற்க;
பறவைகள் கூடி அமர்ந்து புவி மறந்து செவி மடுக்க;
அங்கு கண்ணா நான் கன்றாக நின் விழி பட ஆழிவண்ணா முக்தி தருவாயோ;
இல்லை நீ ஏந்தும் குழலாக வண்ணமயில் பீலியாக நான் மாறும் உக்தி தனை சொல்வாயோ......